நிர்மலா சீதாராமனுக்கு கிடைத்த வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன பெண்களுக்கு உண்டா?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மாநிலங்களவையில் காங்கிரஸ் தலைவர் கார்கே நேருக்கு நேர் கேள்வி

அரசியல்

புதுடில்லி, செப்.20 மாநிலங் களவையில் நேற்று (19.9.2023) பிரதமர் மோடி முன்னிலையில், எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜுன கார்கே பேசினார்.

அப்போது, பிற்படுத்தப் பட்ட வகுப்பை சேர்ந்த பெண் களுக்கே அனைத்து கட்சி களும் தேர்தலில் ‘சீட்’ கொடுப் பதாகவும், அப்பெண்களால் உறுதியாக செயல்பட முடி யாது என்றும் அவர் கூறினார். அதற்கு ஆளுங்கட்சி உறுப் பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுந்து பேசியதாவது:- எல்லா கட்சி களும் உறுதியான பெண் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்லை என்று கார்கே கூறுவதை ஏற்க முடியாது. எங்கள் கட்சியின் அனைத்து பெண்கள் சார்பில் நான் பேசுகிறேன். எங்களுக்கு பிரதமர் மோடி அதிகாரம் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒரு அதிகாரம் அளிக்கப்பட்ட பெண். எங்கள் கட்சியின் ஒவ்வொரு பெண் நாடாளு மன்ற உறுப்பினரும்  அதிகாரம் அளிக்கப்பட்டவர்தான். எனவே, பெண்களை இழிவு படுத்தக்கூடாது என்று அவர் பேசினார். 

அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ”உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின பெண் களுக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார். 

மறுபடியும் ஆட்சேபனை தெரிவித்த நிர்மலா சீதா ராமன், ”திரவுபதி முர்மு யார்? பெண்களுக்கிடையே பாகுபாடு பார்க்காதீர்கள். அனைத்து பெண்களுக்கும் தான் இடஒதுக்கீடு கேட்கி றோம்” என்று கூறினார். அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தலையிட்ட பிறகு, கார்கே வேறு பிரச்சினை குறித்து பேச ஆரம்பித்தார். மோடி ஆட்சியில் கூட்டாட்சி முறை பலவீனம் அடைந்ததாக கார்கே பேசியபோது, பாரதீய.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் ஆண்ட மராட்டியம், கருநாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநி லங்களின் அரசுகளை ஒன்றிய அரசு கவிழ்த்ததாக கார்கே பேசியதற்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். கார்கே தொடர்ந்து பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. நிலுவையை கொடுக்க ஒன்றிய அரசு தாமதம் செய்வதாக குற்றம் சாட்டினார். அதற்கு நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசிய தாவது:- கார்கே சொல்வது முற்றிலும் தவறு. கடன் வாங் கிக்கூட எனது அமைச்சகம் மாநிலங்களுக்குப் பணம் கொடுத்துள்ளது. 3 தடவை முன்கூட்டியே பணம் கொடுத் துள்ளோம். எந்த மாநிலத் துக்கும் ஜி.எஸ்.டி. நிலுவை இல்லை என்று அவர் பேசி னார். கார்கே பேசி முடித்த வுடன், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *