இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் நாகர்கோவிலில் உள்ள தந்தை பெரியாருடைய சிலைக்கு 17.9.2023 அன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கட்சிப் பொறுப்பாளர்கள்.
கிருஷ்ணகிரி பெரியார் மய்யத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்தார். அறிவரசன், கா. மாணிக்கம், கோ.தங்கராசன், சா.கிருஷ்ணன், ஆ.கோ.இராஜா, எஸ்.கே. நவாப், அஸ்லாம்ரகுமான் செரிப், டி.ஏ. நாகராஜ், டி.சி. ஆர். தினேஷ்.
தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு (17.9.2023) ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் கன்கரா தந்தை பெரியார் – அண்ணா நினைவகத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்: ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ. கணேசமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ச. சந்தோஷினி சந்திரா மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர்.