காங்கிரஸ் தேர்தல் அறிக்கை – நாட்டின் கதாநாயகன் ஜாதி, மத அடிப்படையில் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா? புதுச்சேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

viduthalai
2 Min Read

புதுச்சேரி,ஏப்.8-  காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகனாக விளங்குகிறது என்று புதுச்சேரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுச்சேரி மக்களவை தொகுதி யில், இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மேனாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து புதுச்சேரியில் நேற்று (7.4.2024) நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக தலை வரும், தமிழ்நாடு முதலமைச்சரு மான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

புதுவையில் கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த நாரா யணசாமிக்கு ஒத்துழைப்பு தராமல் நிர்வாகத்தை சீர்குலைத்தவர் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி. இப்படி, தமிழ்நாட்டி லும் ஓர் ஆளுநர் இருக்கிறார். இருவரும் அய்பிஎஸ் ஆக இருந்தவர்கள்தான்.
காவல் துறையில் பதவிக் காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர் ஆக்கிவிடுகின்றனர். இவர்கள் விளம்பரத்துக்காக அரச மைப்பு சட்டத்தை மீறி பாஜக ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.

ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல. புதுச் சேரியில் ஆளும் பாஜக கூட்டணி கட்சி முதலமைச்சர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி. எல்லோரும் டில்லிக்குகீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை.

அதனால்தான், கூட்டணி அர சாக இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன் கைப்பிடியிலேயே வைத்திருக் கிறது பாஜக. ரங்கசாமியும் அவர் களுக்கு கைப்பாவையாக இருக் கிறார். அவரை டம்மியாக உட்கார வைத்து ஆட்சி நடத்துகிறது பாஜக.

நாடு முழுவதும் பாஜக ஆட்சி யில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட் டார்.
பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதி லும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. சில கார்ப்ப ரேட் நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டின. மக்களுக்காக விலையை குறைக்காமல், ஒரு சிலர் மட்டும் லாபம் ஈட்ட வேண்டும் என நினைக்கும் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.
ஜாதி, மதத்தின் பெயரால் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் மோடி.

சமூக நீதி, இடஒதுக்கீட்டை பாதுகாப்பேன் என அவர் ஒரு நாளும் சொன்னது இல்லை. 2006இல் திமுக தேர்தல் அறிக்கை எப்படி கதாநாயகனாக இருந் ததோ, அதுபோல, தற்போது காங் கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகனாக விளங்குகிறது.

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறு வோம். ஒன்றியத்தில் இண்டியா கூட்டணிதான் ஆட்சிக்கு வரும்.
மக்களின் நீண்டகால கோரிக் கையை ஏற்று, புதுச்சேரிக்கு முழு மாநிலத் தகுதி பெற்றுத் தரப்படும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *