ஹிந்தி எதிர்ப்பு பிஞ்ச செருப்பா? அண்ணாமலைக்கு எச்சரிக்கை! தமிழியக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அறிவிப்பு

2 Min Read

சென்னை, ஏப்.7- பன்னாட்டுத் தமி ழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் விடுத்துள்ள கண்டன அறிக்கை வருமாறு,
இந்தியா விடுதலை பெறுவதற்குரிய போராட்டத்தைப் போன்ற ஓர் எழுச்சிப் போராட்டம்தான் ஹிந்தி ஆதிக்க எதிர்ப் புப் போர். தமிழ்மொழிப் பாதுகாப்பிற்கும், தமிழினப் பாதுகாப்பிற்கும் நடந்த, தமிழர் தம் உரிமைப்போர்.

திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் அனைவரும் ஒன்றாகி டில்லி அரசுக்கு, ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்துக் குரல் கொடுத்த மாபெரும் தமிழர் தம் எதிர் காலத் தலைமுறைகளைக் காக்கும் மானப் போர்.

தலைவர்கள் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான மாணவர் மணிகள் கிளர்ச்சி பெற்று ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி மொழிப்போர் வெற்றி பெற்றது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பெருஞ்சிறைப் பட்டுக் கொடுமைக்கு ஆளானார்கள். கலைஞர் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழ்நாட்டு மக்களே கொதித் தெழுந்து பலப்பலர் பலியாகி கிளர்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஹிந்தி, இந்திய ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தியது. ஹிந்தியே இந்திய ஆட்சி மொழி என்பது தடுக்கப்பட்டது. ஆங்கிலம், ஹிந்தி மொழி பேசாதவர்கள் விரும்பும்வரை நீடிக்கும். நிலைச்சட்டம் இயற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை உருவானது. அன்று ஏற்பட்ட ஆட்சி மாற்றம், அய்ம்பது ஆண்டுகளாக ஹிந்தி எதிர்ப்புக் களம் கண்ட திராவிட இயக்கங்களே தமிழ்நாட்டை ஆண்டு வருகிறது. இனியும் ஆளும் தமிழறிஞர் மறைமலை அடிகள், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.வி.போன்றவர்களும் ஹிந்தி ஆதிக்கத்தை எதிர்த்தனர்.

இதையெல்லாம் உணராது தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மொழிப்போர்த் தியாகிகளை அவமதிக் கும் வண்ணம், வாய்க் கொழுப்பாக ஹிந்தி ஆதிக்க எதிர்ப்பு மொழிப்போரை பிஞ்ச செருப்பு என்று வாய்க் கொழுப் பாகப் பேசுவது. அவரது அறியாமை யாகும்.
இத்தகைய வார்த்தையை நாவடக்க மின்றிக் கூறிய அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் தமிழர்களிடத்தில் மேலும் சரிவையே உருவாக்கும் அவர் கூறிய பிஞ்ச செருப்பு அவருக்குப் பாடம் புகட்டக் காத்திருக்கிறது.

இவ்வாறு வா.மு.சேதுராமன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *