தந்தை : ச . கோவிந்தசாமி பார்புரட்டியார்
தாயார்: அரங்கநாயகி என்கிற குங்குமத்தம்மாள்
பிறந்த ஊர் : திருக்காட்டுப்பள்ளி அருகி லுள்ள இளங்காடு என்னும் சிற்றூர், தஞ்சாவூர் மாவட்டம் .
கல்வி : வேளாண்மை இளங்கலை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம்,சூழல் மாசடைதல் தொடர்பாக விமர்சனங்களையும் ஆக்கபூர்வ மான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர்.
வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.
2007ஆம் ஆண்டு காந்திகிராம பல் கலைக்கழகம் இவருக்கு அறிவியலில் மதிப் புறு முனைவர் பட்டம் வழங்கியது. கோவில் பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார்.
இயற்கை அறிவியலாளர், வேளாண் அறிஞர் கோ.நம்மாழ்வார் பிறந்த நாள் (06.04.1938)
Leave a Comment