இந்த நாட்டில் பறையன், சக்கிலி, வண்ணான், நாவிதன் இருக்கின்றார்கள். இவர்களெல்லாம் நடைமுறையில் ஒவ்வொரு ஜாதியாக அல்லவா இருக்கிறார்கள்! இந்த வேலைகளெல்லாம் ஒழிய வேண்டும் என்று நாம் சொல்கின்றோமா? இந்த வேலைகள் உலகத்தில் எல்லா நாட்டிலும் இருக்கின்ற வேலைகள் தானே! ஆனால், இந்த வேலையை இன்னின்ன ஜாதி மக்கள் தான் செய்ய வேண்டும்; அந்தப்படிச் செய்கிற அவர்கள் எல்லாம் கீழ் ஜாதி மக்களே என்று இழிவுபடுத்தப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’