கோடி கோடி மோடி ஊழல்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்திய நாட்டில் இன்றொரு காட்சி
ஏக்க மாக்கள் இழிவும் போச்சு
சிந்தை தமிழன் சேர்ந்தே நின்றார்
சிறுமை மோடி யோடி மறைந்தார்
முந்தை ஊழல் கோடி செய்தார்
மூடி மறைத்தே பாடம் படித்தார்
விந்தை வேடம் கலைந்த தின்றே
விரைந்து சிறையும் திறக்கு மென்றார்!

தேர்தல் பத்திரம் தேடிக் கொண்டார்
திருட னென்பதை தேர்ந்து மறைத்தார்
பார்வை பருந்து போல பறந்தார்
பாடை பணத்தை சேர்த்தே யணைத்தார்
நேர்மை நெறியை தீயில் வைத்தார்
நீதி பதியும் ஆதி மனுவே
மார்புப் பூணூல் மாய வலையே
ஆயும் அறிஞர் அடங்கும் நாயே!

நாட்டை மிரட்டி நடுங்க வைத்தார்
நாளும் சோதனை வாளை யெடுத்தார்
வீட்டைக் கொளுத்தி வெற்றி யென்றார்
வேற்று மதத்தை தூற்றிக் களித்தார்
காட்டில் கூடும் கஞ்சா கள்ளன்
கடவுள் வேட காமுகக் குள்ளன்
ஆட்டம் பாட்டம் அர்த்த இராத்திரி
ஆமை மோடி ஆவேசம் கொண்டார்!

எதிர்க்கும் கட்சி இல்லை என்றார்
ஏனென் கேள்வி எதெற்கோ யென்றார்
அதிர்ந்து நின்ற ஆதி குடிகள்
ஆட்டு மந்தை ஆகு மென்றார்
பதவி வெறியில் பன்றி போலே
பாய்ந்து குதறிக் கொல்லு மென்றார்
நதியில் மீனோ எதிர்க்க என்றே
நாளும் பறியை நாட்டு மென்றார்!

பேருக்கு அம்பானி பின்னால் நின்றார்
பெற்ற இலஞ்சம் பினாமி யென்றார்
நாருக்குப் பூபோல் நாளு மதானி
நாறும் ஊழல் நாற்றத் தோணி
வாரி சுருட்ட ஒப்பந்த ஊழல்
சாலை போட சாகச சாழல்
மோரில் நீர்போல் மோடி ஊழல்
கோடி கோடி கொள்ளை மோதல்!

உச்ச நீதி மன்றம் கூட
ஊமை யோடி உறங்கு மோடி
உச்சு கொட்டி உயர்ந்த பதவி
ஓடி மோடி மெச்சு மோடி
கச்சு கட்டும் காரிகை யோடி
காவல் சட்டம் காக்கும் கூடி
மெச்சும் வார்த்தை மேவும் மோடி
மேட்டுக் குடியை காக்க வோடி?

பத்து ஆண்டாய் பாரத நாடு
பட்ட பாடு பார்க்க யாரு
அத்து மீற ஆண்டவன் பேரு
ஆணவ மோடி ஆட்டம் பாரு
மொத்த நாடும் ஒற்றை விரலை
ஓங்கி உயர்த்த தேர்தல் நாளு
ஒத்து ஊத இனியும் யாரு
ஓடி ஒளியும் கேடி பாரு!

– பாவலர் சீனி. பழனி. சென்னை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *