பொது அறிவு என்பது மனிதனுக்கு மிக மிகத் தேவை. அல்லவா? அதைப் பெற படிப்பகங்களினால் உதவ முடியும். பலரின் கருத்துகளை அறியப் படிப்பகங்கள் நல்ல வாய்ப்புக் கொடுக்கின்றன. உங்களின் சொந்தப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவதைப் போல் நீங்கள் தினமும் படிப்பகத்திற்குச் சென்று படிக்க வேண்டாமா?