கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

21.11.2023

டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்

* மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி – வழக்கு டிச.1க்கு ஒத்திவைப்பு.

* டிவிட்டரில் இந்தியா 4 டிரில்லியன் டாலர், அதாவது ரூ.333 லட்சம் கோடி பொருளாதாரத்தை தாண்டிவிட்டதாக பாஜக செய்தி பரப்பியது. ஆனால் இவை எல்லாம் பொய் என்று காங்கிரஸ் விளாசி உள்ளது.

* சாதனைகளை சொல்ல முடியாமல் ஜாதி, மதம் பற்றி பேசி பாஜக வாக்கு சேகரிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

* நீதிபதிகள் மாற்றல் தொடர்பான தாமதம் குறித்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இது நல்ல அறிகுறி அல்ல. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனால் பலர் பணிமூப்பு இழக்கிறார்கள் என ஒன்றிய அரசின் போக்குக்குக் கண்டனம்.

தி இந்து

* தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்தியா கூட்டணிக் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டம் – டில்லியில் ஜனவரி மாதம் மாநாடு.

டைம்ஸ் ஆப் இந்தியா

* ஒடிசா மாநிலம் கேந்த்ராபாரா ஊரில் பார்ப்பனர் களுக்கு மட்டுமே அனுமதி என்ற பலகையுடன் தனிச் சுடுகாடு. தாழ்த்தப்பட்டோர் சமூக அமைப்புகள் அரசுக்குப் புகார்.

* குட்கா ஊழல் தொடர்பாக அதிமுக மேனாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்தியப் புலனாய்வுத் துறை அனுமதி கோரிய ஓராண்டுக்குப் பிறகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி. மேலும், தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் ஜி.பாஸ்கரன் மீது ஊழல் வழக்குத் தொடரவும் அனுமதி.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *