சென்னை, ஏப்.5 மக்களவை தேர்தலையொட்டி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ் நாடு உள்பட மாநிலங்களில் நேற்று (4.4.2024) அஞ்சல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு அதிகாரிகள் வீடுகளுக்கே சென்று முதியோர்களின் வாக்குகளை பதிவு செய்கின்றனர்.தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளு மன்றத்தின் 17-ஆவது மக்கள வைக்கான காலம் வருகிற ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 18ஆவது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்க ளவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டு உள்ளன. அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக் குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச் சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடை பெறுகிறது. அன்றைய நாளே தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையொட்டி, அனல்பறக்கும் பிரச்சாரம் நடை பெற்று வரு கிறது.இந்த நிலையில், அஞ்சல் வாக்கு சேகரிக்கும் பணி நேற்று தொடங்கி உள்ளது.
இதையொட்டி, மக்களவை தேர்தல் 2024க்கான தமிழ்நாட்டில் முதியோர், மாற்றுத்திறனாளி களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு நேற்று தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாது காப்புடன் வீடுகளுக்கே சென்று அஞ்சல் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று அஞ்சல் வாக்கு சேகரிக் கப்பட உள்ளது. அஞ்சல் வாக்கு களை செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு தொகுதியில் 85 வயதுக்கு மேற் பட்ட முதியோர் 21,805 பேரும், 9,824 மாற்றுத்திற்னாளி வாக்கா ளர்களும் உள்ளனர். அதில், 2,201 முதியவர்களும், 800 மாற்றுத் திறனாளி களும் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, விருப்பம் தெரிவித்த 3,001 பேரிடம் அஞ்சல் வாக்குகளை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அஞசல் வாக்கு செலுத்த
விண்ணப்பிப்பது எப்படி..?
தகுதியுள்ள வாக்காளர்கள் நேரில் வாக்களிக்க முடியா விட்டாலும், அவர்களது வாக்குரி மையைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதில் அஞ்சல் வாக்குச் சீட் டுகள் முக்கியப் பங்காற்றுகின்றன. வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளிலிருந்து அஞ்சல் வாக்குகள் தனித்தனியாக எண் ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் நாளில், அஞ்சல் ஓட்டுகள் தேர்தல் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு, எண்ணும் மய்யத்திற்கு கொண்டு வரப்படும். தேர்தல் அதிகாரிகள் அஞ்சல் வாக்குகளை அவற்றின் செல்லுபடியாகும் தன்மையை ஆராய்ந்து, யாருக்கு வாக்கு அளித்தார்களோ, அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கையில் கணக் கிடப்படும்.