இதுதான் மோடியின் பார்லிமெண்ட் ஜனநாயகம்

3 Min Read

அரசியல்

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறு குறித்த சிறப்பு விவாதம் 18.9.2023 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆற்றிய உரையின்  ஒரு பகுதி.

புதுடில்லி, செப்.21  கட்டடம் பழையதா, புதியதா என்பதல்ல, எவ்வளவு பெரியதாகவும் கட்டிடம் கட்டலாம். ஆனால், இந்திய ஜன நாயகத்திற்கு நாம் என்ன செய் தோம்?. அது நாடாளுமன்ற ஜன நாயகத்தை பாதுகாக்குமா என்று தான் பார்க்க வேண்டும். அமைச் சர்கள் பொறுப்பாக இருந்து  உறுப் பினர்கள் எழுப்பும் மக்கள் பிரச் சனைகளுக்கு பதிலளிக்க வேண்டும். அது இங்கு நடைபெறுகிறதா என்பதுதான் கேள்வி. 

நாடாளுமன்றத்திற்கு வருகை என்பது அதை நிர்வகிப்பவர்களின் முக்கிய கடமை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைப்பதிவு 0.001 சதவிகிதமாக உள்ளது. 

இந்த அவையில் ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் பெயர்களை குறிப் பிடாமல் விட்டுவிட்டீர்கள். நம்  அரசமைப்பு சாசனத்தை வடி வமைத்தவர்களின் கனவுகளும் நோக்கங்களும் குறித்து விவாதிப்ப தன் மூலம்தான் இது முழுமை பெறும். அரசமைப்பு சாசனம் சுதந் திரம், சமத்து வம், சகோதரத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆனால், இன்று புல்டோசர் யுகத்தில் இருக்கிறோம். பொருளாதார பாகுபாட்டைப் பார்க்கிறோம். ‘ஜனநாயகம்’ என்பது பெரும்பான்மையினரின் கருத்தல்ல, சிறுபான்மையினரின் பாதுகாப்பில் தான் இருக்கிறது’ என்று டாக்டர் அம்பேத்கர் கூறி னார். 20 கோடி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மக்கள் மன்றங்களில், நீதிமன்றங் களில் மட்டுமல்ல; ஊடகங்களிலும் கூட. எந்த அளவில் இருக்கிறது?

கல்வி உதவித் தொகையை   குழிதோண்டிப் புதைத்தீர்கள்

கேரளத்தைப் பாருங்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று. ஆனால் டில்லியில் என்ன நிலை உள்ளது? இந்த அரசு முகலாயர்கள் பற்றி நிறைய பேசுகிறது. ஆனால் இந்தியர்கள் பற்றி பேசுவதில்லை. அக்பரின் அமைச்சரவையிலும் அவுரங்கசீப் அமைச்சரவையிலும் 50 சதவிகிதம் ஹிந்துக்கள் இருந் தார்கள். ஒரு முன்னுதாரணமாக இருந்த நேருவின் அமைச்சரவையில் 2 கேபினட் அமைச்சர்கள் இருந் தார்கள். மவுலானா ஆசாத், ரபி  அகமது கித்வாய், ஜான் மத்தாய், ஷியாம பிரசாத் முகர்ஜி மற்றும் பார்சி, சீக்கியர்கள் இருந்தனர். மவுலானா ஆசாத் டில்லி ஜும்மா மசூதி முன் நின்று கொண்டு, “இது நமது நாடு, நாம் இந்த தேசத்தை உருவாக்கினோம். இந்த நாட் டைவிட்டுப் போக வேண்டிய அவ சியம் இல்லை” என்றார். அப்படிப் பட்ட வரின்  பெயரில் இருந்த கல்வி உதவித் தொகையை அப்படியே குழிதோண்டிப் புதைத்துவிட்டீர்கள். 

சகோதரத்துவம் குறித்து என்ன  சொல்கிறீர்கள்? இப்போது பயன் படுத்தும் வார்த்தை என்ன? ‘பாகிஸ் தானுக்கு போ’ என்கிறீர்கள். நாங்களும் இந்த நாட்டின் அங்கம். உங்களுக்கு இணையான நாட்டுப் பற்று உள்ளவர்கள். இப்போது ஜி 20 மாநாடு நடத்தப்பட்டது. பாராட்டு கிறோம். ஆனால், நாட்டின் நிலை என்ன? தனி நபர் வருவாய் மிகவும் குறைந்திருக்கிறது. மனிதவள மேம்பாடு, வறுமைக் கோட்டில் மிகவும்  கீழ் நிலையில் இருக்கிறோம். நம்மை விட கீழ் நிலையில் உள்ள ஒரு நாடு இருக் கட்டும் என நீங்கள் ஆப்பிரிக்க கூட்டமைப்பை சேர்த்தீர்கள். வறுமையில் உத்தரப்பிரதேசம், பீகார் 30, 40 சதவிகிதமாக உள்ளன. தென் மாநிலங்களில் இது 10 சத விகிதம். கேரளத்தில் கிட்டத்தட்ட வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டது.

‘நமோநாயகம்’ 

ஆன ஜனநாயகம்

இந்திய நாட்டின் பெயர் சுய சார்புடைய மதச்சார்பற்ற சோசலிச ஜனநாயகக் குடியரசு. இன்று என்ன சுயசார்பு இருக்கிறது? டிரம்ப் முதல்  ஜோபைடன் வரை சார்ந்து இருக் கிறோம். அன்று அணிசேரா நாடு களுக்கு நேரு தலைவராக இருந்தார்.  இன்று எல்லாம் அதானியிசம் ஆகி விட்டது. 

அரசமைப்புச் சாசனத்தின் முகப்புரையில் உள்ள ஜனநாயகம் தற்போது ‘மோடி நாயகம்’ அல்லது ‘நமோநாயகம்’ ஆகிவிட்டது. 

75 ஆண்டு இந்திய ஜனநா யகத்தை குறிப்பிடும்போது காந்தி யாரை மறக்க முடியாது. அவர் கீதை, குர்ஆன், பைபிளை நெஞ்சத்தில் ஏந்தியதால் கொல்லப்பட் டார். நீங்கள் காந்தியாருக்கு  பதி லாக சாவர்க்கரை முன்னிறுத்து கிறீர்கள். அதனால் தான் அவரது பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்தீர்கள்.

நன்றி: ‘தீக்கதிர்’ 20.9.2023

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *