3.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தேர்தல் பத்திர ஊழலை மறைக்கவே மோடி அரசு கச்சத்தீவு பிரச்சினையை தற்போது எழுப்பியுள்ளது, கனிமொழி தாக்கு.
* இந்தியா கூட்டணி அமைந்ததும், தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்கள், அரவிந்த்
கெஜ்ரிவால் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தல்.
* குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தெலுங்கானாவில் அமல்படுத்த மாட்டோம் என காங்கிரஸ் அமைச்சர் உத்தவ் உறுதி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2014 முதல், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மத்திய அமைப்புகளிடமிருந்து நடவடிக்கையை எதிர்கொண்ட 25 முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவில் இணைந்து உள்ளனர். அவர்களில் 23 பேர் விடுவிக்கப்பட்டனர்
* நாங்கள் 400 இடங்கள் பெற்றால், அரசியல் சட்டத்தை முழுவதுமாக திருத்துவோம் என ராஜஸ்தான் பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசிய காட்சிப்பதிவால் சர்ச்சை. காங்கிரஸ் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை; ஒவ்வொரு ஜனநாயக மற்றும் சுதந்திரமான நிறுவனத்தையும் பாஜக அழித்து வருகிறது:. அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டங்களைத் தகர்க்கும் பாஜக-ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை தோற்கடிக்க வேண்டும் என்று சரத் பவார் பேச்சு.
* அலோபதியில் கோவிட் நோய்க்கு நிவாரணம் இல்லை என்று பாபா ராம்தேவின் பதஞ்சலி மக்களுக்கு சொல்லும்போது, கண்களை மூடிக்கொண்டு இருந்தீர்களா, மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ‘பிரசாரத்தின் அப்பா’: பாஜக அரசியல் விளம்பரம் தொடர்பாக பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி கிண்டல். மோடி தான் போரை நிறுத்தினார், சிக்கலில் இருந்த இந் தியர்களை காப்பாற்றினார் என்ற பாஜக காணொலிக்கு பதிலடி
* தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6572 கோடி குவித்த பிரதமர் மோடிக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம்
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment