பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா

Viduthalai
2 Min Read

கால மாற்றத்தை உணர்ந்து செயல்பட்டவர் பெரியார் ஊடகவியலாளர் கோவி.லெனின் பேச்சு

அரசியல்

வல்லம். செப்.21- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) தந்தை பெரியார் அவர் களின் 145ஆம் ஆண்டு பிறந்த நாள்  நடைபெற் றது.

விழாவில் உரையாற் றிய ஊடகவியலாளர் கோவி.லெனின், சமூக விடுதலையை பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். எல்லோருக்கும் எல்லா மும் கிடைக்க வேண்டும் என்பதே பெரியார் கண்ட கனவாகும். அந்த கனவு இப்போது நிறை வேறி வருகிறது. பெரியார் காண விரும்பிய உலகம் இப்போது அரும்பி வருகிறது. 

எல்லாவற்றிலும் அறிவியல் பார்வையை செலுத்தியவர் பெரியார். அறிவியல் பார்வைதான் பகுத்தறிவு ஆகும். பழம் பெருமை பேசுவதை பெரியார் வெறுத்தார். இன்று கல்வி வளர்ந்திருக் கிறது. 

எந்தப் பற்றும் இல்லை என்று சொன்ன பெரியா ருக்கு மனிதப் பற்று ஓங்கியிருந்தது. மாறாதது என்ற கொள்கை உடையது ஸநா தனம், எல்லாம் மாறக் கூடியது என்பது பெரி யார் கொள்கை என்று பேசினார். 

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன துணை வேந்தர் செ.வேலு சாமி தம் உரையில் பெரி யாரின் சாதனைகளை விளக்கினார். விழாவில் பேசிய மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலைக்கல்லூரி மாணவி பூந்தளிர் பேசும் போது பெரியார் உழைப் பினால் சமத்துவம் வளர்ந்திருக்கிறது என்றார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா கும் உரிமை கிடைத்திருக் கிறது என்றார். 

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவி யாழினி பேசும்போது பெரியாரின் உழைப்பு பெண்களை அடிமைத் தளையில் இருந்து விடு வித்து இருக்கிறது. பெண் களுக்கு கல்வி கிடைக்க செய்திருக்கிறது. மூட நம்பிக்கைகளை அகற்றி இருக்கிறது என்றார். 

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவி உஷா பேசும் போது பெரியாரின் சாதனை களைப் பட்டியலிட்டார்.  சமூக நீதி கிடைப்பதற்கும், சமத்துவம் நிலவுவதற்கும், மூடநம்பிக்கை மறைவ தற்கும் பெரியாரே கார ணம் என்றார். 

பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டு மய்ய இயக்குநர் (பொறுப்பு) இணைப் பேராசிரியர் முனைவர் சத்யப்ரியா வரவேற்புரை நிகழ்த்தி னார். மாணவி அபிநயா இணைப்புரை வழங்கி னார். விழாவின் போது மாணவர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்ற னர். பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங் கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *