கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* பெண்கள் இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரிக்கை.
* புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் முதலாவது கூட்டத்தில் எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட அரசிய லமைப்பு சட்டத்தின் நகல்களில் மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் வார்த்தைகள் ஏன் இடம் பெறவில்லை என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 454 வாக்குகளும், எதிர்த்து 2 வாக்குகள் பதிவானது.
* சென்னை பல்கலை துணைவேந்தர் தேடல் குழுவில் இருந்து யுஜிசி பிரதிநிதி நீக்கம்: தமிழ்நாடு அரசு அதிரடி
* ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் சேரலாம். நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு. (இப்போ தகுதி திறமை?)
* சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். இது குறித்து விசாரணை வேண்டும் என்கிறார் அமெரிக்கா நாட்டின் தூதுவர் எரிக்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பெண்களுக்கான 33 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு அளித்திட சோனியா, ராகுல் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கோரிக்கை.
* பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய கனிமொழி, “பெண்களை மதிப்பதாகவும், அவர்களின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வது பெண்களை ஏமாற்றும் சூழ்ச்சியே” என்ற பெரியார் பேச்சை மேற்கோள் காட்டி பாஜகவை விமர்சித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஸநாதன தர்மத்தின் மீதான தாக்குதலை கூர்மைப் படுத்த புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குடியரசுத் தலைவர் இல்லாததை உதயநிதி மேற்கோள் காட்டி பேச்சு.
தி டெலிகிராப்:
* புல்வாமா தாக்குதல் குறித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் மேனாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் கோரிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் நடத்த ஒன்றிய அரசை நிதிஷ்குமார் பேச்சு.
– குடந்தை கருணா