உத்தியோகங்களில் நாணயமும், ஒழுக்கமும் சர்வ சாதாரணமாய்க் கெட்டுப் போயிருப்பதற்குக் காரணம் என்ன? உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாள்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவ தாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாகவே கருதுவதாலும் தாங்கள் செலவழித்த பணத்தை உத்தி யோகங்களில் பெறப் பார்க்கிறார்கள். இது இயற்கையே என்று சமாதானப்படுத்திக் கொள்வது அறிவுடைமையா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’