‘விடுதலை’ ஏட்டின் மேனாள் துணை ஆசிரியரும், கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவரும், சிறந்த நூல்களை எழுதியவரும், சுயமரியாதை வீரருமான ‘நீடாமங்கலம் மானமிகு நீலன் (வயது 88) நேற்றிரவு (1.4.2024) மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
சமீபத்தில்தான் அவருடைய 60ஆம் ஆண்டு மணவிழாவில் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தோம். அதற்குள் இந்த முடிவு ஏற்பட்டு விட்டதே! அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகியிருக்கும் அவரது வாழ்விணையருக்கும், அருமைச் செல்வங்களுக்கும், அவர் நடத்தி வரும் கல்விக் குழும பணியாளர் களுக்கும், நண்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.4.2024
குறிப்பு: நாளை (3.4.2.024 )மாலை 5 மணிக்கு நீடாமங்கலத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.