தேர்தல் ‘ஸ்டண்ட்’ வணிக சிலிண்டர் விலை ரூ. 30 குறைப்பு

2 Min Read

சென்னை,ஏப்.2- வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உரு ளையின் விலை ரூ.30.50 குறைத்து அதற்கான அறிவிப்பு முறையாக வெளியிடப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறினர்.

பன்னாட்டு சந்தை யில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந் திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.

இதில் சமையல் எரி வாயு உருளைகளின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
வணிக எரிவாயு உரு ளைகள் ரூ.1960.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது அதன் விலை நேற்று மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

ரூ.30.50 குறைப்பு

அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரி வாயு உருளை ரூ 30.50 குறைக்கப்பட்டு, ரூ.1930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலைகுறைப்பு நேற்று (1.4.2024) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு முறை யாக வெளியிடப்பட்டுள் ளது.
சென்னையைப் போன்று, டில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் வணிக எரிவாயு உருளைகளின் விலை குறைக்கப்பட் டுள்ளது.
கடந்த 3 மாதங்களில் வணிக எரிவாயு உருளை யின் விலை ரூ.36 அதிகரித் திருந்த நிலையில், நேற்று ரூ.30.50 குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன் படுத்தப்படும் 14.2கிலோ எடை கொண்ட சமை யல் எரிவாயு உருளை கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு ரூ.100 குறைக் கப்பட்டது. தற்போது விலையில் எந்த மாற்ற மும் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படு கிறது.

மானியம் குறித்து ஆய்வு

இந்த ஆண்டு தொடக் கத்தில் வணிக பயன் பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1,924.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது நாட் டில் சமையல் எரிவாயு உருளை பயன்படுத்தும் நுகர்வோர்களின் எண் ணிக்கை சுமார் 33 கோடியாக உள்ளது.
2025-2026ஆம் ஆண் டுக்குள் மேலும் 75 லட் சம் சமை யல் எரிவாயு உருளை இணைப்பு கள் வரும் என்று கடந்த ஆண்டு மதிப்பிடப்பட் டது.
சமீபகாலமாக, மானிய சமையல் எரி வாயு உருளை குறித்து அரசு தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது என்று எண்ணெய் நிறுவன அதி காரிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *