சென்னை,ஏப்.2- செம்மரக் கடத்தல் உள்ளிட்ட 59 குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பாஜக மாநில நிர்வாகிக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளரும், தொழிலதிபரு மான கே.வெங்கடேஷ், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்து டன், கல்வி நிறுவனங்களும் நடத்தி வருகிறேன். பாஜகவில் மாநில செயலா ளராகவும் பதவி வகித்து வருவதால் அரசியல் ரீதியாகவும், தொழில் ரீதியா கவும் எனக்கு பல்வேறு மிரட்டல்கள் வருகின்றன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் என் மைத்துனர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடைய முத்து சரவணனை காவல்துறையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்ட்டருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் காட்சிப் பதிவு ஒன் றும் பரவியது.
நெல்லை கூலிப்படைத் தலைவரான பைரவா என்ற வீரமணி, காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் முத்துசரவணனின் சகோதரர் கருப்பு சாமி என்னை கொலை செய்ய திட்ட மிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கருப்புசாமி தற்போது தலைமறைவாக இருந்து வருகிறார்.
நான் அதிகமாக வெளியே செல்ல வேண்டாம் என காவல்துறை உதவி ஆணையரும் என்னை எச்சரித்துள் ளார். எனது உயிருக்கு ஆபத்து இருப்ப தால் எனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
ஆந்திராவில் 49 வழக்குகள்
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப் பில் கூடுதல்குற்றவியல் வழக்குரைஞர் தாமோதரன் ஆஜராகி தாக்கல் செய்த பதில் மனுவில், “மனுதாரருக்கு எதிராக செங்குன்றம் காவல் நிலையத்தில் மட் டுமே 10 குற்ற வழக்குகள் உள்ளன.
இதுதவிர, செம்மரக் கடத்தலில் ஈடுபட்டது உட்பட ஆந்திராவில் மட் டுமே 49 வழக்குகள் நிலுவையில் உள் ளன. இவர் சரித்திர பதிவேடு குற்ற வாளியாகவும் உள்ளார். சமூக விரோதி களின் நடமாட்டம் உள்ளதா என இவரது வீட்டை காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.
இவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கினால் எல்லா சரித்திர பதிவேடு குற்றவாளிகளும் தங்களுக்கும் பாது காப்பு வழங்கக் கோருவர். அது சாத்திய மில்லை என்பதால் மனுதாரருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க முடி யாது” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங் கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மனுதாரருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டப்பட் டுள்ளது. செம்மரக் கடத்தல் என பல் வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மனுதாரர் மீது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த சூழலில் இவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது. அதேநேரம், மிரட்டல் இருப்பதாக மனுதாரரை எச்சரிக்கும் காவல்துறையினரின் நடவடிக்கையை யும் புரிந்துகொள்ள முடியவில்லை’’ என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.