பெரியகுளம், ஏப். 1- தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் காலை 10 மணிக்கு பெரியகுளம் வடகரையில் நடைபெற்றது.
வழக்குரைஞர் காமராஜ் அலுவலகத்தில் பகுத்தறி வாளர் கழக நகர தலைவர் மருத்துவர் எம்.ஏ.இளங் கோவன் தலைமையிலும் மாவட்ட பொருளாளர் கருப்பணன், விஜயராஜ் காந்தி, இர.அறிவழகன், எழுத்தாளர் அழ.மோகன் முன்னிலையிலும் நகர ப.க.செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். ப.க.ஒன்றிய செயலாளர் துரைபாண்டி, எம்.சண்முகம், முருகன், பரமசிவம் மற்றும் பலர் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.
நிறைவாக பகுத்தறிவாளர் கழக பணிகளையும் தலைமைக்கழக அறிவிப்பின் படியும் தந்தை பெரியார் கொள்கைகளையும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நகரம் மற்றும் கிராமங்களில் பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என விளக்கி சிறப்புரை யாற்றினார். ப.க. மாவட்ட செயலாளர் அ.மோகன் கீழ்வடகரை கிராமம் அழகர்சாமிபுரத்திற்கு பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது. தலைவர் ம.இப்ராஹிம்பாசா, செயலாளர் அ.மாரி முத்து, பொருளாளர் காமராஜ், துணைதலைவர் அழமோகன், துணைசெயலாளர் க.ப.சின்னமுத்து, அமைப்பாளர் அ.பாபுவை மாவட்ட செயலாளர் அ.மோகன் அறிவித்தார். நன்றியுரை நகர பொருளாளர் ச.முருகன் ஆற்றினார்.
தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
Leave a Comment