மோடியின் உண்மை முகம் இதுதான்!

2 Min Read

சந்திரயான் விண்கலத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்புப் பணியில் ஈடுபட்ட அறிவியலாளர் அன்றாட செலவிற்கு இட்லி விற்றுப்பிழைக்கும் கொடுமை 

அரசியல்

புதுடில்லி, செப். 22- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சி யாக, சந்திரயான்-3 எனும் விண் கலனை கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண் கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந் தது. சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன. 

அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகு தியில் உள்ள ஹெவி என்ஜினி யரிங் கார்பரேஷன்(HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறை யின் கட்டுப்பாட்டின் கீழ் இந் நிறுவனம் செயல்படுகிறது பல ஆண்டுகளாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் 18-மாத காலமாக சந்திர யான் -3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழி யர்கள் உட்பட தனது 2800 ஊழியர்களுக்கு ஊதியம் தர இயலவில்லை.

இந்நிறுவனத்தில் பணிபுரிந்த வர்களில் ஒரு தொழில்நுட்ப பணியாளர், மத்தியப் பிரதேச ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா. இவருக்கு மனைவியும், பள்ளிக்கு செல்லும் 2 மகள்களும் உள்ளனர். இவரும் ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால், எச்.இ.சி. ஊதியம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்ததால், நிதி நெருக்கடி அதிகரித்தது. பள்ளியில் மகள்களுக்கு மாதாந்திர கட்டணம் கூட செலுத்த முடியாததால், பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்தது. இதனால் மகள்கள் இருவரும் வீட்டிற்கு அழுது கொண்டே வருவார்கள். நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்ட மன்ற கட்டடத்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய் கிறார். இதில் கிடைக்கும் வரு மானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார். காலையில் எச்.இ.சி. நிறுவனத்திற்கு செல் லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.

சந்திரயான் என்ற நிலவுக் கலன் 3 நிலவில் இறங்கியதும், ஆப்பிரிக்காவில் இருந்த மோடி உடனடியாக நேரலையில் சந் திரயான் நேரலையை அகற்றி விட்டு தனது கையில் மூவர்ணக் கொடியை ஆட்டிக்கொண்டு இருந்தார். அதன் பிறகு அவர் இந்தியா வந்த பிறகும் ஜி 20 உள்ளிட்ட பல அரங்குகளில் சந்திரயான் குறித்து தம்பட்டம் அடித்தார். ஆனால் சந்தியர யான் விண்கலம் விக்ரம் இறங்கு கலம் பிரக்யான் ஆய்வுக்கலன் என மூன்று கருவிகளை தாயா ரித்து கொடுத்த பொறியியலா ளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லை. நில வில் இந்தியா இறங்கப் பாடு பட்டவர்கள் சாலையோரம் வந்து விட்ட பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சமூக வலைதளங் களில் கண்டனங்கள் குவிகின்றன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *