1.4.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி உறுதியாக வெல்லும், சென்னை பதிப்பின் ஆசிரியர் ஆர். மோகன் கணிப்பு.
* நாட்டை பாஜக அழித்துவிட்டது, டில்லியில் நடந்த “இந்தியா” கூட்டணி பேரணியில் தலைவர்கள் கண்டனம்.
* ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஒரு விஷம். நாட்டை அழித்து விடும், மல்லிகார்ஜூனா கார்கே எச்சரிக்கை
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 200 இடங்களைத் தாண்டாது, மம்தா முழக்கம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரதமர் மோடி அரசியல் சட்டத்தை மீறியும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக கிறார், கூட்டாட்சி முறைக்கும் எதிராக செயல்படுகிறார், ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
* இரு மாநில முதலமைச்சர்களை சிறையில் தள்ளி பிரதமர் மோடி ‘மேட்ச் பிக்சிங்’: 4 கோடீஸ்வரர்களுடன் கை கோர்த்து தேர்தலில் வெற்றிபெற சதி. டில்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணி பொதுக்கூட்டத்தில் ராகுல் குற்றச்சாட்டு
தி இந்து:
* தேர்தல் பத்திரங்கள் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ள தாகவும், உண்மையான கொள்ளைக் கூட்டம் யார் என்பது முழு நாட்டிற்கும் தெரியும் என்றும் உத்தவ் தாக்கரே தாக்கு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* டில்லியில் நடைபெற்ற பேரணியைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பல மாநிலங்களில் “இந்தியா” கூட்டணி பேரணி நடத்திட முடிவு..
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment