உறக்க நிலையில் உள்ள லேண்டர், ரோவர் மீண்டும் செயல்படுமா? இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி

2 Min Read

அரசியல், தமிழ்நாடு

சென்னை, செப். 22 – நிலவில் உறக்க நிலையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கலன்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரு வதற்கான பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னெடுத்துள் ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான்-3 விண் கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர், ‘பிரக்யான்’ ரோவர் வாகனம் ஆகியவை ஆக.23-ஆம்தேதி நில வின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட் டன. 

லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 12 நாட்கள் ஆய்வு செய்து பலஅரிய தகவல் களை நமக்கு அனுப்பின. அதன் மூலம் நிலவின் வெப்பநிலை, அங்குள்ள தனிமங்கள், நில அதிர்வின் தன்மை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் கண்டறியப் பட்டன. இதற்கிடையே, நில வின் தென்துருவப் பகுதியில் இரவு சூழல் வந்துவிட்டதால் ரோவர், லேண்டர் கலன்களின் இயக்கமானது முன்னெச்சரிக் கையாக நிறுத்தி வைக்கப்பட்டு அவை உறக்க நிலையில் (ஸ்லீப் பிங் மோடு) வைக்கப்பட்டன. ஏனெனில், லேண்டர், ரோவர் கலன்கள் சோலார் பேனல்கள் மூலம் கிடைக்கும் சூரிய ஒளி மின்சக்தியை கொண்டே இயங் குகின்றன. இரவு நேரத்தில் அவற்றால் மின்சாரத்தை உற் பத்தி செய்ய முடியாதுஎன்பதால் இரு கலன்களும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு, அவை உறக்க நிலைக்கு மாற்றப்பட்டன. நிலவில் பகல் பொழுது வந்ததும் லேண்டர், ரோவர் கலன்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரு வதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. 

அதன்படி தென்துருவப் பகுதியில் தற்போது சூரிய உதயம்தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந் நிலையில், திட்டமிட்டபடி லேண்டர், ரோவர் கலன்கள் இன்று (செப்.22) மீண்டும் உயிர் பெறுமா என அனைவரும் ஆவ லுடன் எதிர்நோக்கியுள்ளனர். அதற்கான முன்னேற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர். 

மைனஸ் 200 டிகிரி குளிர்

நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கு மேலாக குளிர்நிலை இருக்கும். அதனால் லேண்டர், ரோவரில் உள்ள சாதனங்கள், இயந்திரங்கள் குளிர்ந்த சீதோஷ்ண சூழலில் சேதமடையாமல் மீண்டும் இயங்க வேண்டும். அதற்கான சில முன்தயாரிப்புகளை இஸ்ரோ செய்திருந்தாலும், அவை முழு மையாக பலன் தரும் என்று கூறமுடியாது. எனவே, ரோவர், லேண்டர் ஆகியவை கடுமை யான வானிலையில் இருந்து தப்பித்து மீண்டும் இயங்க வேண்டும் என்பதே விஞ்ஞானி கள், அறிவியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *