பெரம்பலூர் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில், மாவட்ட செயலாளர் விசயேந்திரன் முன்னிலையில் தஞ்சையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றுதல் தொடர்பாகவும், “நாடாளுமன்றத் தேர்தலும் நமது கடமையும்” தொடர்பாக நேற்று (31.3.2024) ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மேலும் வருகின்ற 13.04.2024 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரம்பலூரில் நடத்த இருக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் தொடர்பாக திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும் இந்நிகழ்வில் நகர தலைவர் அக்ரி ஆறுமுகம், பகுத்தறிவாளர் கழக தலைவர் நடராசன், வ.களத்தூர் கிளை அமைப்பாளர் சர்புதீன், துரைசாமி, பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment