சிதம்பரம், ஏப். 1- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில், கழக மகளிரணித் தோழர் குடியாத்தம் ந.தேன் மொழி எழுதிய ‘உயிர்வலி’ நூல் அறிமுக விழா 27.3.2024 அன்று காலை 11 மணியளவில் நடை பெற்றது.
தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ.பிலவேந்திரன் வரவேற்புரையாற்றினார். கலைப்புல முதல்வர் முனைவர் க.விஜயராணி தலைமையேற்று, பெண்களுக்கு பெரியார் ஆற்றிய தொண்டுகள் குறித்துப் பேசினார். நூலை அறிமுகம்
செய்து, இந்திய மொழிப் புல தனி அலுவலர் நே.சஜிதா நூலின் சிறப்புகளை தொகுத்து வழங்கினார்.
நூலாசிரியர் குடியாத்தம் ந.தேன்மொழி தன் ஏற்புரையில், தொடக்கக் காலத்தில், பெரியார் கொள்கை பற்றி உணராமல் இருந்தேன். பிறகு, பெரியாரின் நூல்களைப் படித்த பின்னர் பெரியார் பெண் உரிமைப் போராட் டத்தில், எந்தளவு சாதனை புரிந் துள்ளார் என்பதையும், அவரின் தொண்டால் பெண்கள் சமுதா யம் அடைந்த உரிமைகள் குறித் தும் – நீண்டதொரு உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மொழிப்புல முதன்மையர் முனைவர் அரங்க.பாரி, பேராசிரியர் பூ.சி.இளங் கோவன், பேராசிரியர் சோ.கல் பனா, பேராசிரியர் ஆறு.அன்புக் கரசன் ஆகியோரும் மற்றும் அதிக அளவில் மாணவிகளும், மாணவர்களும் கலந்து கொண் டனர்.
இறுதியில் தமிழியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வ.கணபதிராமன் நன்றி கூறினார்.