இந்தியா கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் துரை.இரவிக்குமார் அவர்களை, திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி, திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் இரா.அன்பழகன், மாவட்டச்செயலாளர் செ.பரந்தாமன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், விழுப்புரம் ச.பழனிவேல், திண்டிவனம் மாவட்ட அமைப்பாளர் பா.வில்லவன் கோதை, திண்டிவனம் நகரத் தலைவர் உ.பச்சையப்பன் ஆகியோர் சந்தித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “மக்கள் விரோத பா.ஜ.க.அரசை விரட்டியடிப்போம்” என்ற புத்தகத்தை வழங்கினார்கள். 12.4.2024 அன்று திண்டிவனத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரை கூட்டம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை தெரிவித்து விடைபெற்றார்கள்.
திண்டிவனத்தில் தமிழர் தலைவர் பரப்புரைப் பயணப் பொதுக் கூட்டம் துரை.இரவிக்குமாருடன் கழகப்பொறுப்பாளர்கள் சந்திப்பு
Leave a Comment