புதுக்கோட்டை, நவ. 21- தமிழ் நாடு அரசின் கோப்புக ளுக்கு ஒப்புதல் அளிப்ப தாக ஆளுநர் கூறியிருப் பதாலேயே, அவர் மீதான வழக்கில் இருந்து நாங் கள் பின்வாங்க மாட் டோம் என்று சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று (20.11.2023) அவர் அளித்த பேட்டி:
அதிமுக மேனாள் அமைச்சர்கள் சி. விஜய பாஸ்கர், பி.வி. ரமணா ஆகியோர் மீது குட்கா வழக்கில் குற்றப் பத்தி ரிகை தாக்கல் செய்ய அனு மதி கோரி ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு நிலுவை யில் இருந்தன. அதற்கு அனுமதி அளித்துள்ள தாக ஆளுநர் உச்ச நீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளார். நவம்பர் 13-ஆம் தேதி கையொப்பமிட் டதை கூட எங்களிடம் சொல்லியிருக்கலாம். அவர் நீதிமன்றத்தில் கூறிய பிறகுதான் தெரிந்து கொண்டோம்.
எந்தெந்த கோப்புக ளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார் என்ப தைப் பொறுத்துத்தான் அடுத்தகட்ட நடவ டிக்கை இருக்கும்.
தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்கும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளு நரின் கடமை. அதை விடுத்து, அனுமதித்தது எத்தனை, அனுமதி அளிக்காதது எத்தனை என்று குறிப்பிடுவது ஆளுநருக்கு அழகல்ல.
தமிழ்நாடு அரசு கோப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதாக அவர் கூறியிருப்பதாலேயே, வழக் கில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.
தவறு செய்த மேனாள் அமைச்சர்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்கு றுதி தந்தோம். எந்த வழக்கிலிருந்தும் யாரும் எளிதில் தப்பி விடக் கூடாது என்பதற்காக தகுந்த ஆதாரங்களை சேகரித்து வழக்கு தாக்கல் செய்துள்ளதால் காலக் கெடு அதிகமாக தேவைப் படுகிறது.
தமிழ்நாடு ஆளுநரும் முதலமைச்சரும் இணக்க மாக செயல்பட வேண் டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்த ரராஜன் கூறுகிறார். தெலங்கானா மாநில முதல்வரோடு இணக்க மாக செயல்படுகிறாரா என்பதை அவர் கூற வேண்டும் என்றார் ரகுபதி.