சென்னை,ஏப்.1- நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு வழங்கப்பட்டது. அத்வானியின் வயது மூப்பு காரணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை வழங்கினார்.
இதில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமரும், அத்வானி யும் உட்கார்ந்துகொண்டும், குடியரசுத் தலைவர் நின்று கொண்டும் இருக்கிறார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு என வி.சி.க. தலைவர் திருமாவளவன் கேள்வியெழுப்பி யுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்து இருப்பதாவது:
“குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா? தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர்தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தை யேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா?
இந்த அவமதிப்பு- இவர் பெண்மணி என்பதாலா? அல்லது இவர் பழங்குடி என்பதாலா? அல்லது அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா? இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந் ததா? திட்டமிட்டே நடந்ததா?
குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு? பெரும் அதிர்ச்சி யளிக்கிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் அவர்கள் பூரி ஜெகந்நாதர் கோவிலிலும், அஜ்மீர் பிரம்மா கோவிலிலும் தடை செய்யப்பட வில்லையா? காரணம், அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தானே!