பி.ஜே.பி. எல்.முருகன் பிரச்சார வாகனத்தில் அ.தி.மு.க. கொடியாம்!
நீலகிரி, ஏப்.1- நீலகிரி (தனி) நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பிரச் சார வேனின் முன்பு பா.ஜனதா, பா.ம.க., தமிழ் மாநில காங்கி ரஸ், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் அடங்கிய கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. அதற்கு மத்தியில் அ.தி.மு.க. கொடியும் இருந்தது. பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இல்லாத நிலையில், ஒன்றிய அமைச்சரின் பிரச்சார வேனில் அ.தி.மு.க. கொடி இருந்ததால் பிரச்சாரம் தொடங்கிய நேரத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் பிரசார வேன் தயாரிக்கப்பட்டபோது தவறுதலாக அ.தி.மு.க. கொடி வைக்கப்பட்டதா? அல்லது ஓ.பன்னீர்செல் வம் தரப்பினர் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தினரா என்று விவாதம் ஏற்பட்டது. இதை கவனித்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், கொடியை அகற்றுமாறு கட்சியினரிடம் கூறி னார். உடனே அ.தி.மு.க. கொடி அகற்றப்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
பக்தியால் விபரீதம்:
வெள்ளியங்கிரி மலை ஏறிய சென்னை பக்தர் மரணம்
கோவை,ஏப்.1- சென்னை முகப்பேரை சேர்ந்தவர் ரகு ராம் (வயது 60). தனியார் வேலைவாய்ப்பு மய்யம் நடத்தி வந் தார். தீவிர ஆன்மிக ஈடுபாடு கொண்ட இவரும், அவரது அக்கம்பக்கத்தில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து வேன் மூலம் கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேறு வதற்காக கோவைக்கு வந்தனர்.
தொடர்ந்து அவர்கள் மலையேறத் தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5ஆவது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டு இருந்த முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்தனர். அப்போது அவர் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து ரகுராமின் உடல் உடற் கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஆலாந்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த ஒரே மாதத்தில் மட்டும் வெள்ளியங்கிரி மலையேறிய 6 பக்தர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.