ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பி.ஜே.பி.க்கு தான் சிக்கல் ரூபாய் 4,613 கோடியை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் செல்வப்பெருந்தகை பேச்சு

2 Min Read

சென்னை, ஏப்.1- ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது பா.ஜனதாவுக்கு தான் அபராதம் வரும் என்றும், ‘ரூ.4 ஆயிரத்து 613 கோடியை பா.ஜனதா தான் வருமானவரித் துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கு.செல்வப்பெருந்தகை பேசினார்.
கண்டன ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை மூலம் முடக்கியது மற்றும் ஆயிரத்து 823 கோடி ரூபாய் அபரா தம் செலுத்த வேண்டும் என தாக்கீது அனுப்பியதை கண்டித்து ஒன்றிய பா.ஜனதா அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (31.1.2024) மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட் சியின் தலைவர் கு.செல்வப் பெருந் தகை தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் தவறு செய்யவில்லை

ஆர்ப்பாட்டத்தின்போது, செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
1885ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது முதல் 140 ஆண்டுக ளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சி அங்கீ கரிக்கப்பட்ட கட்சியாக இருக் கிறது. நேற்று முளைத்த காளான் பா.ஜனதாவால் காங்கிரஸை அழித்து விட முடி யுமா? உங்களை தோலுரித்து காட்ட எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி இருக்கிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு உங்களால் பதில்சொல்ல முடி யவில்லை. ஏற்கெனவே, 135 கோடி ரூபாய் காங்கிரஸ் கட்சியின் வங் கிக் கணக்கில் இருந்து ஒன்றிய நிதி அமைச்சகத்தால் திருடப்பட்டிருக் கிறது.
இதை, தேசிய அவமானமாக அய்.நா. சபை பார்க்கிறது. இப் போது ரூ.1.823 கோடி அபராதம் விதித்து தாக்கீது அனுப்பி இருக்கி றார்கள். எந்த சட்டத்தின் அடிப் படையில் தாக்கீது அனுப்புகி றார்கள். இந்திய அரசியல் சட் டத்தில் அங்கீக ரிக்கப்பட்ட அரசி யல் கட்சிக்கு விதிவிலக்கு இருக் கிறது. தேர்தல் ஆணையத்திலும் நாங்கள் ஆண்டு தோறும் முறை யாக தெரிவித்து வருகிறோம்.காங் கிரஸ் எங்கும் தவறு செய்ய வில்லை.

பா.ஜனதா ரூ.4,613 கோடி செலுத்த…
ஆனால், பா.ஜனதாவின் கணக்கு தேர்தல் ஆணையத்தில் யார் பெய ரும், எந்த எண்ணும் இல்லாமல் மொட்டை மொட்டையாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
அப்படி பார்த்தால் ரூ.4 ஆயி ரத்து 613கோடியை பா.ஜனதா தான் வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும். அதை பற்றி தகவல் இல்லை. இப்போது நாங் கள் அது குறித்து வழக்கு தொடர உள்ளோம். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா மிகப்பெரிய தோல்வியை தழுவப் போகிறது.
இந்த நாட்டை மீட்டெடுக்க எங்கள் தலைவர் ராகுல்காத்தி புறப்பட்டுள்ளார். பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்று மக்கள் எழுச்சியோடு இருக்கிறார் கள். எனவே, எங்களுக்கு தாக்கீது அனுப்புவதற்கு முன்பு உங்க ளுடைய கணக்கை சுயபரி சோதனை செய்து கொள்ளுங்கள்.
ஆட்சி மாற்றம் ஏற்படும். உங்களுக்கு அபராதம் வரும். ராகுல் பிரதமராக வருவார். உங்க ளுடைய பாசிசத்துக்கும், பாசிச ஆட்சிக்கும் முடிவு கட்டும் நேரம் வந்து விடும்.
-இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *