என் பிரச்சாரத்தில் முக்கியம் சமூக நீதிதான்! உதயநிதி ஸ்டாலின் உறுதி

viduthalai
2 Min Read

கடலூர், ஏப்.1- எடப்பாடி பழனிசாமி போல் நான் பச் சோந்தி அல்ல என்றும், சமூக நீதியை மட்டும்தான் பேசு வேன் என்றும் கடலூர் பிரசா ரத்தில் உதய நிதிஸ்டாலின் கூறினார்.
கடலூரில் பிரசாரம்
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து நேற்று (31.3.2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட் டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

ஒரே நேரத்தில் தண்டனை
மோடியின் பெயரை மாற்றி புதிய பெயரை வைத்துள்ளேன். இனி அவரை மிஸ்டர் 29 பைசா என்றுதான் அழைக்க வேண்டும். ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அவர் செல்லாக்காசுதான். எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு செல்ல பெயர் வைக்கப்பட்டுள் ளது. அது பாதம் தாங்கி பழனிசாமி. அவர் சசிகலாவின் காலை பிடித்து முதலமைச்சர் ஆகிவிட்டு, அவரது காலையே வாரிவிட்டவர்.
எடப்பாடி ஆளுக்கு தகுந் தாற்போல் மாற்றிமாற்றி பேசுகிறார். அவரை போல் பேச நான் பச்சோந்தி அல்ல. எப்போதுமே ஒன்று தான் பேசுவேன். சமூக நீதியை மட்டும்தான் பேசுவேன்.
நாடாளுமன்ற தேர்தல் மூலம் எடப்பாடி பழனிசாமிக் கும், மோடிக்கும் நாம் ஒரே நேரத்தில் தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கு ஏப்ரல் 19ஆம் தேதி காங்கிரஸ் வேட் பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு கை சின்னத்தில் வாக்களியுங் கள்.
-இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சிதம்பரத்தில் பிரசாரம்
பின்னர் சிதம்பரம் நாடாளு மன்ற தொகுதியின் வேட்பா ளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவனை ஆதரித்து சிதம்பரம் தெற்குரத வீதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட் சிக்கு பானை சின்னம் கிடைத் ததன் மூலம் தேர்தலில் பாதி வெற்றி பெற்றுவிட்டோம். தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி விலகிவிடும். அ.தி.மு.க. கூட்ட ணிக்கு சென்றுவிடும் என்று சில அரசியல் புரோக்கர்கள் கூறினார்கள்.
ஆனால் திருமாவளவன் மக்களுக்காக கொள்கை கூட் டணியில் நம்மோடு உறுதியாக நின்றார். தி.மு.க. 21 இடங்களில் போட்டியிடுகிறது.
ஆனால் விடுதலை சிறுத் தைகள் கட்சி போட்டியிடும் 2 தொகுதிகளின் வெற்றி மிகவும் முக்கியமானது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

தி.மு.க. ஆட்சி பொறுப் பேற்ற பின் இங்கு பல திட்டங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிதம்பரம் தொகுதியில் மேற் கொண்டு பல்வேறு மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்பதை வாக்குறு தியாக அளிக்கிறேன்.

-இவ்வாறு அவர் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *