சென்னை, நவ. 21- பிகார் மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் வலி யுறுத் தப்பட்டுள்ளது.
இக்கட்சியின் உயர் நிலைக்குழுக் கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத் தில் நேற்று (20.11.2023) நடைபெற்றது. விசிக தலை வர் தொல்.திருமாவள வன், பொதுச்செயலர் ரவிக்குமார் உள்பட மூத்த நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்ற னர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் கண்டறி யப்பட்ட பஞ்சமி நிலங் களை நிலமில்லாத பட் டியல் சமூக மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு தமிழ்நாடு அரசு உடன டியாக உரிய நடவடிக் கைகளை எடுக்க வேண் டும்.
பீகார் மாநிலத்தைப் போல தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அவ் வாறு ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள் ளப்படும் போது 1931-இல் கடைசி யாக நடைபெற்ற ஜாதி வாரி கணக்கெடுப்பின் போது நிகழ்ந்த குறை பாடுகள் களையப்பட வேண்டும். அத்துடன், மக்கள் தொகை அடிப் படையில் பட்டியல் சமூ கத்தினர், பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத் தப்பட்டோர் ஆகியோ ருக்கான இட ஒதுக்கீட் டின் அளவை உயர்த்த வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் ஆதி திராவிட மக்களுக்கு எதிரான ஜாதிய வன் கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரு கின்றன. குறிப்பாக தென் மாவட்டங்களில் அது மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கி றது. தற்போது, நெல்லை மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்த ஜாதிய வன் கொடுமை வழக்கில் தடுப்புக் காவல் சட்டம் பயன்படுத்தப் பட்டிருப் பது போல தாழ்த்தப்பட் டோர் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான பிற அனைத்து வழக்குகளி லும் எளிதில் பிணையில் வெளிவர இயலாத வகையில் தடுப்புக் காவல் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.