சென்னை, மார்ச் 31- ரயில் பயணத்தில் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. இது, மூத்த குடிமக்களுக்கு பேருதவியாக இருந்தது. கொரோனா காரணமாக, ரயில் பயணக் கட்டணத்தில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த இந்த சலுகை 2020 மார்ச் மாதம் மோடி அரசால் ரத்து செய்யப்பட்டது.
இதை மீண்டும் வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், “இந்த கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது” என்று ரயில்வே அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டதன் மூலம் 2020-2022 ஆண்டுகளில் ரூ.1500 கோடியும், 2022-2023ஆம் ஆண்டில் ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர் டிஅய்) கீழ் கேட்ட கேள்விக்கு ரயில்வே நிர்வாகம் மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகையை ரத்து செய்த மோடி அரசு! தகவல் அறியும் சட்டத்தில் தகவல்
Leave a Comment