சென்னை, மார்ச் 31- தமிழ்நாட்டில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலமாக சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப் படுகிறது.
இதுவரை 67.30 லட்சம் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 36.50 லட்சம் சர்க்கரை நோயாளிகள், இரண்டு பாதிப்புகளும் உள்ள 31.3 லட்சம் நோயாளிகள் உட்பட மொத்தம் 1.54 கோடி இணை நோயாளிகள் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, மாதந் தோறும் மருந்துகள், டயாலிசிஸ், இயன்முறை சிகிச்சைகள் உள் ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இத் திட்டம் மக்களிடையே நல்ல வர வேற்பை பெற்றுள்ளது” என்றார்.
மக்களைத் தேடி மருத்துவம் 1.54 கோடி நோயாளிகளுக்கு மருந்து வினியோகம்
Leave a Comment