காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரச்சார இசைத்தட்டு வெளியீடு

2 Min Read

சென்னை,மார்ச் 31- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கான மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பாடல்களை கவிஞர் இளைய கம்பன் எழுதியுள்ளார். அவற்றுக்கு ஸ்டீபன் இசையமைத்துள்ளார்.
இதன் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன் தினம் (29.3.2024) நடை பெற்றது.
மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை முன்னிலையில், அகில இந்திய செயலாளர் சிரி வெல்லபிரசாத் குறுந் தகட்டை வெளியிட் டார்.
பின்னர் கு.செல்வப் பெருந்தகை செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

பிரதமரிடம் தேர்தல் பத்திரம் கொடுத்தால், அரசு ஒப்பந்தப்பணி, சலுகைகள் என பாஜக அரசில் எதையும் சாதிக்க லாம்.
2017-2018 முதல் 2020-2021 வரையிலான ஆண்டுகளில் அகில இந் திய காங்கிரஸ் கட்சி வங்கிக் கணக்கை சரியாக பராமரிக்கவில்லை என்று கூறி, ரூ.1700 கோடியை செலுத்துமாறு வருமான வரித் துறை தாக்கீது அனுப்பியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

காங்கிரஸ் பேரியக்கம் 139 ஆண்டுகளைக் கடந் துள்ளது. இதில் பல தேர்தல்களை, பல கோணங்களில் சந்தித் துள்ளது.
ஆனால், ஒருபோதும் தேர்தலில் சர்வாதிகாரப் போக்கை சந்திக்க வில்லை. இந்திய வரலாற்றில் முதன்முறையாக நாட்டை ஆள்வதற்கு சர் வாதிகாரம் துடித்துக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்துக்கு உட்பட்ட அரசியல் கட் சிகளை முடக்கும் பணியை பா.ஜ.க. தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உச்சகட்டமாக, அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக் குகளை முடக்கி வருகிறது.

வங்கிக் கணக்கை முடக்கினால், காங்கிரஸ் முடங்கும் என்று கருது கின்றனர்.
பாஜக ஆட்சி, பாசிச ஆட்சி என்பதை அவர் கள் நிரூபித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
கள்ளப்பணம், கருப் புப் பணத்தை தேர்தல் பத்திரம் மூலம் திரட்டும் பாஜக, இந்த தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறது.
வேட்புமனுத் தாக் கலின் போது பிரமாணப் பத்திரத்தை, எந்த பத் திரத்தில் தாக்கல் செய் வது என்றுகூட தெரியா மல், குழப்பத்தையும், கலவரத்தையும் ஏற்ப டுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முயற்சித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதால், அவரது செல் வாக்குதான் உயர்ந்துள் ளது. இதன் மூலம் “இந்தியா” கூட்டணியின் பலம் அதிகரிக்கும்.

-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *