புதுக்கோட்டை,மார்ச் 31- அரசியல் கட்சிகள் வருமான வரி செலுத்த வேண்டிய தில்லை என்ற விதி உள்ளதாக மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெளிவுபடுத்தி உள் ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடைபெற்ற சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் அறிமுக கூட்டத்தில் அவர்பேசியது:
அரசியல் கட்சிகளுக்கு வருமான வரி செலுத்த வேண்டி யதில்லை என்ற விதி உள்ளது. ஆனால், ஏதோ ஒரு பிழையை கண்டுபிடித்ததாகவும், அதற்கான தொகை, வட்டி, அபராதம் என ரூ.1,821 கோடி வருமான வரி செலுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சிக்கு தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை முடக்கும் எண்ணத்தில் தான் இந்த தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய கட்சியையும் முடக்கிவிட்டு, மாநில கட்சித் தலை வர்களையும் அச்சுறுத்திவிட்டு நாட்டில் ஒரே கட்சியாக பாஜக மட்டுமேஇருக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம்.
மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகம் உயிரோடு இருக்காது. எனவே, ஜனநாயகத்தை காப்பாற்றவும், ஏழை எளியோருக்கு திட்டங்களை செயல் படுத்தவும் “இந்தியா” கூட்டணியை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.