தஞ்சை, மார்ச் 31- 17.3.2019 அன்று மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை தஞ்சாவூர் பூபதி நினைவு பெரியார் படிப்பதில் தகவல் தொழில்நுட்பப் பயிற்சி கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட தோழர் கள் பங்கேற்றுப் பயிற்சி பெற்றனர்.
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.
X தளம், Facebook, WhatsApp, telegram ஆகிய தளங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது எப்படி? #tag trending செய்வது எப்படி?
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி ஆகியோர் குறித்த பொய்ச் செய்திகளை வெளியிட்டு திரிபு வாதம் செய்ப வர்களுக்குச் சமூக வலைதளங் களில் ஆதாரத்துடன் உண்மைச் செய்திகளை எப்படி கொண்டு சென்று பதிலடி கொடுப்பது?
திராவிடர் கழகத் தலைமைக் கழகம் சார்பில் நடத்தப்படும் இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் குறித்த செய்திகள்,
விடுதலை தலையங்கம், ஆசிரி யர் அறிக்கை போன்ற முக்கிய செய்திகளை இணையதளத்தில் படிப்பது மற்றும் ஒலி வடிவத்தில் கேட்பது,
நமது புத்தகங்கள் ஒலிப் புத்தக மாக வருவதை கேட்பது எப்படி?
கூகுள் லென்ஸ் மூலம் பிற மொழிகளில் இருக்கும் செய்தி களைத் தமிழில் மொழிபெயர்த் துப் படிப்பது எப்படி?
விரைவில் வர இருக்கிற பெரியார் விஷன் ஓ டி டி தளங்கள் குறித்த செய்திகள்
உள்ளிட்ட இன்னும் ஏராள மான செய்திகளைக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் விரிவாக, விளக்கமாகப் ப்ரொஜெக்டர் பவர் பாயிண்ட் விளக்கத்துடன் தெளிவாக எடுத்து ரைத்தார்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் மா.அழ கிரிசாமி யூ-டியூப் சேனல்கள் பற்றி யான விளக்கங்களை எடுத்துக் கூறினார்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆவடி.முருகேசன் ஜ் தளம் பற்றிய விளக்கங்களை எடுத்துரைத்தார்.
மாநில இளைஞரணிச் செயல £ளர் நாத்திக.பொன்முடி தலைமை கொடுக்கும் செய்திகளை இளை ஞரணித் தோழர்கள் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து உரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பு, சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் ஆசிரியர் அவர்களின் ஆர்வம்,
சமூக வளைதளங்களில் கழகத் தோழர்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு, இன்னும் பரவலாக இப்பணிகளை கழகத் தோழர்கள் மத்தியில் எடுத்துச் சென்று பரவ லாக்குதல் குறித்து உரையாற்றி ஒருங்கிணைத்து நடத்தினார்.
கழகப் பொறுப்பாளர்கள் உணவு உட்பட அனைத்து ஏற்பாடுகளை யும் சிறப்பாகச் செய்து தங்கள் பங்களிப்பைத் தந்து ஊக்கமளித்த னர். காப்பாளர் மு.அய்யனார் இறுதியாக அனை வருக்கும் நன்றி கூறினார்.
மாநில ப.க. அமைப்பாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி அன்பழ கன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பட்டுக் கோட்டை கழக மாவட்ட தலைவர் பெ.வீரை யன் தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாநில ப.க அமைப்பாளர் சி ரமேஷ், பேரா வூரணி க.சசிகுமார், சேதுபாவா சத்திரம் ஒன்றிய இளைஞரணி தலைவர் வசி, பட்டுக் கோட்டை கழக மாவட்ட இளைஞரணி தலைவர் அ.பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட அமைப்பாளர் சோம.நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் பேராவூ ரணி இரா.நீலகண்டன், திருவை யாறு ஒன்றிய இளைஞரணி செய லாளர் செந்தலை க.கலையரசன், அறந்தாங்கி மாவட்ட துணை தலைவர் பா.மகாராசா, பாலகிருஷ் ணாபுரம் ம.பண்பா ளன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ரெ.மணி மாறன், பொதுக் குழு உறுப்பினர் மு சேகர், பட்டுக் கோட்டை நகர தலைவர் சிற்பி வை.சேகர், பட்டுக் கோட்டை பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ரெத்தினசபா பதி, மன்னார்குடி நகர இளைஞ ரணி தலைவர் மா.மணிகண்டன், செரு களத்தூர் சிவராமலிங்கம், மன் னார்குடி மா.சிவஞானம், காசாங் காடு முத்து.துரைராஜன், மன்னார் குடி பாலகிருஷ்ணன், சாருக்கான், உ.கதிர்வேல், சே.கபி லன், கோட் டூர் ஒன்றிய செய லாளர் எம்.பி. குமார், சி.சிவராஜ், கள்ளக்குறிச்சி மா.ஏழுமலை, மாநில இளைஞரணி துணை செய லாளர்கள் இரா.வெற்றிக்குமார், முனைவர் வே.ராஜவேல், ச.குமார், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், மாவட்ட இளை ஞரணி துணைச் செயலாளர் ஆ.பிரகாஷ், மன்னார்குடி சிவ. வணங்காமுடி, தலைமைக் கழகப் பேச்சாளர் பூவை புலிகேசி, ஏவிஎன் குணசேகரன், தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, வழக்குரைஞர் சிங்கார வேலு, கே.ரத்தினவேலு, சம்பத்குமார், வல்லம் அழகிரி, புதிய பேருந்து நிலைய தகுதி செயலா ளர் சாமி.கலைச்செல்வன், மன்னார்குடி மாவட்ட துணை செயலாளர் விக்ரபாண்டியம் புஷ்ப நாதன், திருவையாறு கவுத மன், மாவட்ட ப.க இணைச் செயலாளர் ஆ.லட்சுமணன் நீடா மங்கலம் ஆசிரியர் வீரமணி, பகுத்தறிவு பால்ராஜ், திருவையாறு ஒன்றிய செயலாளர் துரை ஸ்டா லின், திருவையாறு ஒன்றிய தலை வர் சா.கண் ணன், தஞ்சை மாவட்ட வழக்குரைஞர் அணி தலைவர் இரா சரவணகுமார், பவர் வசந்தன், க.இளங்கோவன், வீரப்பிள்ளை, ஆ.விக்னேஷ், பேராசிரியர் துரைராஜ், நா.எழிலரசன், இரா.வீரக் குமார் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.