சென்னை, மார்ச் 31- இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக கழகப்பொறுப்பாளர்கள் தமிழ்நாடெங்கும் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டின் அரசமைப்புச்சட்டம், மதச்சார்பின்மை, ஜன நாயகம், மாநில உரிமைகள் உள்ளிட்ட அத்துணையும் பாது காக்கப்படவேண்டுமானால், இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் களத்தில் இறங்கி மக்களிடையே சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் பரப்புரை பயணத்துக்கான ஏற்பாடுகளை கழகப்பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் கீழ்க்கண்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் பல்வேறு கட்சிப்பொறுப்பாளர்களை சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பரப்புரைப்பயணம் சிறப்பாக நடை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
தென்காசி
தென்காசி மாவட்ட திமுக செயலாளர் வே.செயபாலன் அவர்களை மாவட்ட திமுக அலுவலகத்தில் சந்தித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய மக்கள் விரோத பா.ஜ.க.அரசை விரட்டியடிப்போம் என்ற புத்தகத்தை கழகப்பொறுப்பாளர்கள் வழங்கினர்.
மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் பயனாடை அணிவித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் தேர்தல் பரப்புரையை தென் காசியில் தொடங்குவதற்கு மிகுந்த மகிழ்ச்சியை மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். பகுத்தறிவாளர்கழக பொறுப்பாளர் மா.ஆறுமுகம்,திருச்சி வீ.மகேந்திரன் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரி யர் எழுதிய “மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப் போம்” என்ற புத்தகத்தை மாவட்டத் தலைவர் மு.முனியசாமி, மாவட்டச்செயலாளர் கோ.முருகன் ஆகியோர் வழங்கினர். 3.4.2024 அன்று பரப்புரை மேற்கொண்டு தூத்துக்குடி வருகைதரும் ஆசிரியர் அவர்களை வரவேற்று கூட்டத்தை சிறப்பாக நடத்துவோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
திண்டிவனம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர், சிறுபான்மையினர் நலம், மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களை, தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி தலைமை யில் சந்தித்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “மக்கள் விரோத பா.ஜ.க.அரசை விரட்டியடிப்போம்” என்ற புத்தகம் வழங்கப்பட்டது. 12.4.2024 அன்று தின்டிவனம் கழக மாவட் டம் சார்பில் கோட்டேரிப்பட்டு கூட்ரோட்டில் ஆசிரியர் ஆரணி தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் தரணி வேந்தனை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளும் கூட்டத்தை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
திண்டிவனம் மாவட்டத் தலைவர் இரா.அன்பழகன், மாவட்டச் செயலாளர் செ.பரந்தாமன், விழுப்புரம் மாவட்ட ப.க.தலைவர் துரை.திருநாவுக்கரசு, மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வழக்குரைஞர் தா.தம்பிபிரபாகரன், திருச்சி மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
திருத்தணி
திருத்தணியில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், பெருந்தகையாளர் எஸ். சந்திரன் அவர்களை, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மா.மணி, மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.கிருட்டிணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ந.இரமேசு, கலைமாமணி பாடகர் பன்னீர்செல்வம் ஆகியோருடன் சந்தித்து பயனாடை அணி வித்து, தமிழர் தலைவர் “எழுதிய மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்” என்ற புத்தகம் வழங்கப்பட்டது. 10.4.2024 அன்று திருவள்ளூரில் இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த்செந்தில் அவர்களை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் பரப்புரை யாற்றும் கூட்டத்தை சிறப்பாக நடத்துவோம் என்றார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் அவர்களை, மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.வெ.முரளி, மாவட்டச் செயலாளர் இளையவேல், இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் சு.லோகநாதன் ஆகியோருடன் சந்தித்து தமிழர்தலைவர் ஆசிரியர் எழுதிய மக்கள்விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
10.4.2024 அன்று மாலை ஆறுமணிக்கு இந்தியா கூட்டணி யின் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து, பரப்புரையாற்ற வரகை தரும் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவோம் என மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
அரியலூர்
13-04-2024 அன்று மாலை 6-00 மணிக்கு ஜெயங்கொண் டத்தில். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை ஆதரித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 29-03-2024 அன்று காலை 9.30 மணியளவில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், அவர்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலை மைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச்செல்வன். மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகம், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், அரியலூர் ஒன்றிய தலைவர்
சி.சிவக்கொழுந்து ஆகியோர் சந்தித்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், அதன் வழிமுறைகளையும், எடுத்து ரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்திடுவோம் என்று அமைச்சர் உறுதி யளித்தார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வழக்குரைஞர் சுதா அவர்களை ஆதரித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 15-04-2024 அன்று மாலை 06.00 மணிக்கு மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 29-03-2024 அன்று மதியம் 1.00 மணியளவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும். மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளரு மான வே.நிவேதாமுருகன் ஆகியோரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட தலைவர் கடவாசல். குணசேகரன், மாவட்ட செய லாளர் கி.தளபதிராஜ், மயிலாடுதுறை நகர தலைவர்
சீனி. முத்து, நகர செயலாளர் காமராஜ், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் சாமிதுரை, ஒன்றிய செயலாளர் ஆர்.டி.வி. இளங்கோவன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், செம்பனார்கோவில் ஒன்றிய தலைவர் கவுதமன், ஒன்றிய செயலாளர் முருகையன். கழக பொறுப்பாளர்கள் இளமாறன், அரங்கபுத்தன், தங்க.செல்வராஜ் ஆகியோர் சந்தித்து பொதுக்கூட்டத்தை சிறப் பாக நடத்தவும், அதன் வழிமுறைகளையும், எடுத்துரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்திடுவோம் என்று தி.மு.க. பொறுப்பாளர்கள் உறுதியளித் தனர்.
இராமநாதபுரம்
16-04-2024 அன்று அறந்தாங்கியில் மாலை 6.00 மணிக்கு இராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 29-03-2024 அன்று மதியம் 01.00 மணியளவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் வே.நிவேதாமுருகன் ஆகியோரை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட தலைவர் கடவாசல். குணசேகரன், மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், மயிலாடுதுறை நகர தலைவர் சீனி.முத்து, நகர செயலாளர் காமராஜ், மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் சாமிதுரை, ஒன்றிய செயலாளர் ஆர்.டி.வி. இளங் கோவன், கொள்ளிடம் ஒன்றிய தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், செம்பனார்கோவில் ஒன்றிய தலைவர் கவுதமன், ஒன்றிய செயலாளர் முருகையன், கழக பொறுப்பாளர்கள் இளமாறன், அரங்கபுத்தன், தங்க.செல்வராஜ்.ஆகியோர் சந்தித்து பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்தவும், அதன் வழிமுறைகளையும், எடுத்துரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்திடுவோம் என்று அவர்கள் உறுதியளித்தனர்.
கோவை
கோவையில் 6-4-2024 சனி இரவு 6.00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற் காக 28-03-2024 வியாழன் 02.00 மணியளவில் தி.மு.க. கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, கோவை கழக மாவட்ட தலைவர் ம.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ஆ.பிரபாகரன், மாவட்டத் துணைத் தலைவர் மு.தமிழ்ச்செல்வன், காரமடை ஏ.எம். ராஜா, மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.வெங்கடாசலம், கோவை மாநகர செயலாளர் புளியகுளம் க.வீரமணி, மாவட்ட பொறுப்பாளர் யாழ்.வெங்கடேஷ், கழக பகுதி செயலாளர் கு.குமரேசன், இரா.முத்துக்கணேசன், ந.குரு ஆகியோர் கோவையில் சந்தித்து பொதுக்கூட்டத்தை சிறப் பாக நடத்தவும், அதன் வழிமுறைகளையும், எடுத்துரைத்தனர். சிறப்பான முறையில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளை செய்திடுவோம் என்று தி.மு.க. மாவட்ட செயலாளரும் உறுதியளித்தார்.