“பா.ம.க.வுக்கு தமிழ்நாடு முதலமைச்ர் சமூகநீதிப் பாடம் எடுக்க வேண்டாம்” என்கிறார் மருத்துவர் ச.ராமதாஸ்.
ஒழுங்காகப் பாடம் படிக்காமல், தேர்வில் (தேர்தலிலும்) தோல்வி அடையும் மாணவர் களுக்குச் சிறப்புக் கவனம் எடுத்து பாடம் நடத்து வதுதானே சரியான ஆசிரியர்களின் கடமை. முதலமைச்சர் சரியாகவே செய்கிறார் இல்லையா?.
“கிறிஸ்தவர்கள் பெரும்பான்மை வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகலாந்து மற்றும் மணிப்பூரின் மலைப் பிரதேசங்களில், வேட்பாளர்களை களம் இறக்காமல், இந்த லோக்சபா தேர்தலில் பாதுகாப்பான ஆட்டத்தை பா.ஜ.க., தலைமை ஆடி வருகிறது” என்கிறது தினமலர்.
தாரை வார்த்தா? ஓடி ஒளிந்ததா? என்பதை மக்கள் அறிவார்கள்.