தமிழ்நாடு பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் காணொலிமூலம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ் மொழி உலகின் மூத்த மொழி, என்னால் தமிழில் பேச முடியவில்லையே என்று வருத்தம் உள்ளது. தமிழ் தாய் மொழியாக கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.
இதனை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: மார்ச் 29 ஆம் தேதி மாலை செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி, காலை செய்தி: அழகிய தமிழ்ச்சொல் “வானொலி” இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது. தமிழர்கள் எப்படி நம்புவார் கள். மோடியின் கண்ணீர், ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம். கடந்த காலங்களில் தமிழ் நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது ஹிந்தியில் மட்டுமே பேசுவதன் உள்நோக்கம் என்ன. கருப்புப் பணம் மீட்பு, மீனவர்கள் பாதுகாப்பு, 2 கோடி வேலைவாய்ப்பு, ஊழல் ஒழிப்புபோல் காற்றில் கரைந்த உங்கள் கேரண்டி களில் ஒன்றுதான். விமானங்களில் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத் திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை. ‘எங்கும் ஹிந்தி எதிலும் ஹிந்தி’ என மாற்றியது தான் மோடி அரசின் சாதனை!
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.