தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி பேச்சு!
திருப்பூர், மார்ச் 30- – திருப்பூர் தெற்கு மாவட்டம், வெள்ளக் கோவிலில் நடந்த தேர்தல் பிரச்சா ரத்தில் என்றைக்காவது மோடியைப் பற்றி எடப்பாடி ஒரு வார்த்தை பேசி இருப் பாரா? ஏனெனில் பாஜக பெரிய ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி, அ.தி.மு.க. சின்ன ஸ்டிக்கர் ஒட்டும் கட்சியாக இருக்கிறது. இந்த இரண்டு ஸ்டிக்கர்களும் தேர்தலுக்கு பிறகு ஒட்டிக் கொள்ளும் என தி.மு.க. துணை பொதுச்செயலாளர், கனி மொழி கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையி லான ‘இந்தியா’ கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர், கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரகாஷை ஆத ரித்து தி.மு.க. துணை பொதுச் செயலாளர், நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி கரு ணாநிதி வெள்ளக்கோவில் கடைவீதி பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற் கொண்டார்.
பிரச்சாரத்தில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது :-
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச் சர் அவர்களின் தலைமையி லான “இந்தியா” கூட்டணியின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ள பிரகாஷ் திரா விட இயக்கப் பரம்பரையில் இருந்து வந்தவர்.
அவருடைய தந்தை 50 ஆண்டுகளாக திராவிட முன் னேற்றக் கழகத்தின் கிளை செயலாளராக உள்ளார். அந்த வழியில் வந்தவர் தான் இவர், வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பாக ஈரோடு தொகுதியில் அதிகமாக கேன்சர் வரக் கூடிய அபாயம் உள்ளதால் ஈரோடு தொகுதிக்கு புற்று நோய்க்கு தனிப்பிரிவு வேண்டுமென தேர்தல் அறிக்கையின் போது தெரிவித்தார்.
அதை தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சேர்த்துள்ளார். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வந்தது நிச்சயமாக நிறைவேற் றப்படும். டில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஓர் அமைச்சரின் மகன், விவசாயிகள் மீது காரை ஏற்றி நான்கு பேரை கொலை செய்த கொடு மையும் நடந்தது.
உழைக்கக்கூடிய தொழிலா ளர்களுக்கு எதிரான சட்டங் கள் என அனைத்தையும் கொண்டு வந்தது. சிறுபான்மை யினருக்கு எதிரான சி.ஏ.ஏ. சட்டம் எல்லாவற்றையும் கொண்டு வந்தது மோடியின் பா.ஜ.க. ஆட்சி தான், இதற் கெல்லாம் ஆதரித்து வாக்க ளித்தது அப்போதைய எடப் பாடி பழனிச்சாமி ஆட்சி. தற்போது நல்லவர் போல தனியாக இருப்பது போன்று ஓட்டு கேட்கிறார்.
இன்றைய வரைக்கும் தேர் தல் பிரச்சாரத்தில் என்றைக்கா வது மோடியை பற்றி ஒரு வார்த்தை பேசி இருப்பாரா? ஏனெனில் பாஜக பெரிய ஸ்டிக் கர் ஒட்டும் கட்சி, அ.தி..மு.க சின்ன ஸ்டிக்கர் ஒட்டும் கட்சி. இந்த இரண்டு ஸ்டிக்கர்களும் தேர்தலுக்கு பிறகு ஒட்டிக் கொள்ளும்.
அதனால் அவர்களை நம்பி வாக்களிக்கக் கூடாது. மத்தி யில் பாஜக ஆட்சி அமைந்ததும் 15 லட்சம் வங்கிக் கணக்கில் போடுவதாக சொன்னார்கள். ஆனால் வரவில்லை. ஆனால் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றாலும் கூட அந்த பணத்தையும் எடுத் துக் கொண்டு விட்டார்கள்.
ஆயிரம். அய்நூறு செல் லாது என்றார்கள். பின்பு 2000 நோட்டு செல்லாது என்றார் கள். இப்படி கோமாளித்தன மான ஆட்சியை நடத்தி கொண்டுள்ளனர். தி.மு.க. தலைவர் – தமிழ்நாடு முதலமைச் சர் அண்ணன் ஸ்டாலின் அவர் கள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தமிழ் நாட்டை முன்னணி மாநிலமாக மாற்றி காட்டியுள்ளார்.
தேர்தல் அறிவிப்பில் கூறிய படி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் வழங்கப்பட்டு வருகி றது. இன்று வரை 1கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு இருக் கிறது. தமிழ்நாட்டின் மீது அக் கறையும் மரியாதையும் உள்ள ஆட்சி மத்தியில் வர வேண்டும். பா.ஜ..கவில் பெண்களுக்கு பாது காப்பு இருக்காது. அதனால் இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண் டும். இவ்வாறு கனிமொழி கருணாநிதி பேசினார்.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர், தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளர் என்.கயல்விழி செல்வராஜ் உள்பட மாவட்ட., ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தி.மு.க. துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.