நியூயார்க், மார்ச்.30- அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து அர விந்த் கெஜ்ரிவால் கைது பற்றி அய்.நா.கருத்து தெரிவித்து இருக் கிறது. ஒவ்வொருவரின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புவதாக அதன் செய்தி தொடர்பாளர் கூறினார்.
டில்லி மதுபான கொள்கை முறை கேடு வழக்கில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ஆம் தேதி கைது செய்யப்பட் டார்.
அதுபற்றி அமெரிக்க வெளி யுறவுத்துறை செய்தித் தொடர் பாளர் 3 நாட்களுக்கு முன்பு கருத்து தெரிவித்தார். இந்தியாவில் உள்ள நிலை மையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் தலையீடு தேவை யற்றது என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதி காரியை நேரில் அழைத்து எதிர்ப்பு தெரிவித் தது.
அதுபோல் ஏற்கெனவே ஜெர்மனி தெரிவித்த கருத்துக்காக, அந்நாட்டு தூதரக அதிகாரி யையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
இருப்பினும், மீண்டும் அமெ ரிக்க வெளியுறவு அமைச்சக செய் தித் தொடர் பாளர் இப்பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில், அய்.நா.வும் இப் பிரச்சினை பற்றி கருத்து கூறியுள் ளது. அய்.நா. பொதுச் செயலாளர் ஆன் டனியோ குட்டரசின் செய்தித்தொடர் பாளர் ஸ்டீபன் டுஜாரிக் அன்றாட செய்தியா ளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது, அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் ஆகிய பிரச்சினைகள் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு ஸ்டீபன் டுஜாரிக் கூறிய தாவது:- தேர்தல் நடக்கும் எந்த நாட் டையும் போலவே, இந்தியாவிலும் ஒவ்வொருவரது அரசியல் உரிமை களும், சிவில் உரிமைகளும் பாது காக்கப்படும் என்று பெரிதும் நம்பு கிறோம்.
ஒவ்வொருவரும் நேர்மையான, சுதந்திரமான சூழ்நிலையில் வாக் களிக்க முடியும் என்றும் நம்பு கிறோம்.
-இவ்வாறு அவர் கூறினார்.