டாக்டர் சோம. இளங்கோவன்
ஜாதிக்கு எதிரான இயக்கங்களும் செயல்பாடுகளும் அமெரிக்காவில் வலுப்பெற்றுவரும் நிலையில், வலதுசாரி ஹிந்துத்துவக் குழுமங்கள் ஜாதிக்கு எதிரான நடவடிக்கைகளை ஹிந்துக்களுக்கு எதிரானதாகவும், தங்கள் மத உரிமையை மீறுவதாகவும் வழக்குகளைப் பதிவு செய்துவருகின்றன. ஆனால் அமெரிக்க நீதிமன்றங்கள் இந்தப் பொய்யான வாதங்களையும் அவற்றின் தன்மைகளையும் உடைத்தெறிந்த விவரங்களை கீழே காண்க!
அமெரிக்கா – சியாட் நீதிமன்றத்தின் தீர்ப்பு
வாசிங்டன் மாகாணம் சியாட்டில் நகர மன் றத்தில் ஜாதிப்பாகுபாட்டை எதிர்த்து பாதுகாக் கப்பட்ட பட்டியலில் சேர்த்து கடந்த பிப்ரவரி 2023இல் சட்டம், நிறைவேற்றப்பட்டது. நாட் டிலேயே முதல் முன்னெடுப்பாக, இந்த சட்ட முன் வரைவானது, நகரமன்ற உறுப்பினர் ஷாமா சாவந்த்தால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஓட்டெடுப்பில் ஒருமனதாக நிறைவேறி, சட்டமாக்கப்பட்டது. இதன்படி நகர அளவில் இன, மத, பாலின பாகுபாடுகள் போல ஜாதி ரீதியான பாகுபாடும் குற்றமென்னும் வரையறைக்குள் வருகிறது. இதனால், பணியிடங்களிலோ, சமூகத்திலோ, ஜாதிப் பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டோர் சட்ட உதவியை நாடும் உரிமையைப் பெறுகிறார்கள். பிப்ரவரி 2023இல் பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணை, அனைத்து மக்க ளையும் உள்ளடக்கிய, சமத்துவ சமூகத்தை வளர்ப்ப தற்கான சியாட்டலின் உறுதிப்பாட்டினைக் காட்டும் வகையில் அமைகிறது.
ஹிந்துத்துவாவாதிகளின் அலறல்!
இந்த சட்டம் ஹிந்துமதத்துக்கு எதிரானது, தங்கள் மத உரிமையைப் பாதிக்கிறது என்கிற அடிப்படையில் இச்சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி, வலதுசாரி ஹிந்துத் துவவாதிகள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட அமெரிக்காவின் வாசிங்டன்- மேற்கு மாவட்ட நீதி மன்றமானது சியாட்டிலின் இந்த சட்டத்தையும், அதனை அமல்படுத்தக்கூடிய அரசாணையையும் உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்துள்ளது இது அமெரிக்காவில் சாதிப்பாகு பாட்டுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய மைல்கல் ஆகும்.
பகல் வி. சாவந்த் மற்றும் வாதிகள் தரப்பில் அபிஜித் பகல் என்பவரால், இந்த சட்டம் அமெரிக்க அரசமைப்பின் முதல் மற்றும் பதினான்காவது திருத்தங்களை மீறுவ தாகவும் இந்த வழக்கு வாதிடப்பட்டது. அவர், இச்சட்டம் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்களை களங்கப்படுத்தும் வகையில் அமைவதாகவும், இது வம்சாவளி, நம்பிக்கை, தேசிய அடிப்படை மற்றும் மத அடிப்படையில் ஒரு பிரிவினரை பாகுபடுத்துவதாகவும் உள்ளது எனவும் வாதிட்டார். ஆனால் நீதிமன்றம், திரு. பாகலின் இந்த வாதம் அடிப்படையற்றது எனவும், வாதிகள் தரப்பு இதில் நேரடியான பாதிப்புகளுக்குள்ளான ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் கூறியுள்ளது. மேலும் இந்த அரசாணையின் நோக்கம் எவரையும் பாகுபடுத்தாமல், அரசமைப்பு சட்டத்தை மீறாமல் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதே எனவும் தீர்ப்பளித்துள்ளது.
ஜாதி ஒரு பிரிட்டிஷ் கண்டுப்பிடிப்பாம்!
கலிபோர்னியாவில் இதுபோன்ற சட்டப் போராட்டங்கள் முழுமூச்சாக நடைபெற்று வரும் நிலையில், சியாட்டிலின் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இதே வாதத்தை முன்வைத்து, கலிபோர்னிய சிவில் உரிமை துறைக்கு எதிராக இந்து அமெரிக்கன் ஃபவுண்டேஷன் (HAF) வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தது. ஆரம்பத்தில் ஆகஸ்ட் 2023 இல் தள்ளுபடி செய்யப்பட்டாலும், திருத்தத்திற்கான வாய்ப்பு அனுமதிக்கப்பட்டவுடன் அதன் தரப்பிலிருந்த “ஜாதி ஒரு பிரிடிஷ் கண்டுபிடிப்பு” போன்ற முட்டாள்தனமான கூற்றுகளை திருத்திய நிலையில், இந்த வழக்கு தீவிர விசாரணையில் உள்ளது. இது அமெரிக்காவில் ஜாதியப் பாகு பாடு மற்றும் சிவில் உரிமைகள் குறித்த உரை யாடலை தேசிய அளவில் முன்னெடுத்துள்ளது.
நீதிமன்றத்தின் சரியான பதிலடி!
அமெரிக்காவில், தேசிய அளவில் முதன் முறையாக, சியாட்டில் ஜாதிப்பாகுபாட்டுக்கு எதிராக, இந்த சட்டத்தை நிலைநிறுத்திய அமெரிக்க மத்திய நீதிமன்றத்தின் (Federal Court) இந்தத் தீர்ப்பானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பாதிக்கப்பட்டோருக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிசெய்வது – ஒரு தனிமனிதரின் மத உரிமையையோ, சுதந்திரத்தையோ பாதிக்காது எனக் கூறியுள்ளது இத்தீர்ப்பு – வலதுசாரி ஹிந்துத்துவவாதிகளின் “பழிவாங்கும் இனவாத நடவடிக்கை” (reverse racism) என்னும் வாதத்துக்கும் சரியான பதிலடியாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
(தொடர்புக்கு:
[email protected], +1 831-200-3282)