விருதுநகர், மார்ச் 30- கூட்டமே இல்லை.. இங்கே என்ன பண்றது? சிரிப்பை மறந்த “சித்தி”.. பாதியில் சென்னைக்கே புறப்பட்ட ராதிகா
திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பாஜக வேட்பாளர் ராதிகா சென்னைக்கு புறப்பட் டார்.
2007ஆம் ஆண்டு தொடங் கப்பட்ட சமத்துவ மக்கள் கட் சியை சமீபத்தில் பாஜகவில் இணைத் தார் சரத் குமார். அதிமுகவிலி ருந்து கடந்த 2007ஆம் ஆண்டு விலகிய அவர் தனியாகச் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கி னார்.
சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டு அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்து விட்டது.
இதையடுத்து பாஜகவின் விருது நகர் வேட்பாளராக ராதிகா சரத் குமார் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்த இவர் அங்கே பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப் பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி யில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு, பரப்பு ரையை ரத்து செய்து சென்னை புறப்பட்டுச் சென்றார். சிரித்த முகத்தோடு வந்தவர்.. கூட்டம் இல்லாததால் சிரிப்பை மறந்து ‘டென்சன்’ ஆனார்.
கூட்டம் வரும் என்று காத்திருந் தவர் கடைசியில் அங்கிருந்து சென்றார். போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டம் சேர வில்லை என்று கூறப்படுகிறது.
கடைசியில் சரத்குமார் மட் டும் அவனியாபுரம், பெருங்குடி பகுதி யில் பரப்புரை மேற் கொண்டார்
அங்கே ராதிகாவை வேட் பாளராக நியமித்ததை பாஜக நிர் வாகிகள் விரும்பவில்லை. மேலும் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாவை எதிர்த்து பாஜகவை சேர்ந்த வேதா என்பவர் சுயேச்சை யாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.
இதன் மூலம் விருதுநகரில் பாஜகவில் உள்ள உட்கட்சி பூசல் வெளியே வந்துள்ளது. இப்படிப் பட்ட நிலையில்தான் கூட்டத்தில் ராதிகாவை ஆதரிக்க பாஜக நிர் வாகிகள் யாரும் வராமல் ஏமாற்றம் அளித்துள்ளனர்.
இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த ராதிகா சரத்குமார் பிரச் சாரத்தை ரத்து செய்து விட்டு சென்னைக்கு சென்றுள்ளார்.
பிரமாண பத்திரம்: இந்த நிலையில்தான் ராதிகா சரத் குமார் மற்றும் சரத்குமார் இருவரும் பல கோடி ரூபாய் ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி நிலுவை வைத் துள்ளது அவர்கள் தாக்கல் செய் துள்ள பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி ராதிகா சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வருமாறு:
அசையும் சொத்து மதிப்பு கள்: 27 கோடி ரூபாய்
அசையா சொத்து மதிப்பு கள் தற்போதைய மதிப்பு: 26 கோடி ரூபாய்
அதன்படி சரத் குமாரின் சொத்து மதிப்புகள் பின்வரு மாறு:
அசையும் சொத்து மதிப்பு கள்: 8 கோடி ரூபாய்
அசையா சொத்து மதிப்பு கள் தற்போதைய மதிப்பு: 21 கோடி ரூபாய்
ராதிகா சரத் குமார் அர சுக்கு செலுத்த வேண்டிய தொகை (வரு மான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) – 6 கோடி ரூபாய்
சரத் குமார் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை (வரு மான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை) – 8 கோடி ரூபாய்
இரண்டு பேரும் கிட்டத் தட்ட 14 கோடி ரூபாய் வரு மான வரி நிலுவை, ஜிஎஸ்டி நிலுவை போன்றவை மூலம் அரசுக்கு செலுத்தாமல் வைத் துள்ளனர்.
ராதிகா சரத்குமாருக்கு உள்ள கடன் 14 கோடி ரூபாய்.
சரத் குமாருக்கு உள்ள கடன் 19 கோடி ரூபாய்.