தேர்தல் பரப்புரை-கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு
பெரம்பலூர், மார்ச் 30- பெரம் பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பா ளரை ஆதரித்து திரா விடர் கழகத்தினர் உள் ளிட்ட “இந்தியா” கூட்ட ணிக் கட்சியினரின் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச் சாரம் நடைபெற்றது.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு விற்கு, பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட எளம்பலூர் கிராமத்தில் திரண்டிருந்த பொதுமக் களிடம் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தர சன் வாக்குகள் சேகரித் தார். அப்போது அவர் பேசுகையில்,நள்ளிரவு கூட்டணி, கள்ளக்கூட் டணி இரண்டையும் தோற்கடிக்க வேண்டும் என்றார்.
பெரம்பலூர் நாடா ளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு, பெரம்ப லூர் ஒன்றியத்திற்குட் பட்ட எளம்பலூர், செங் குணம், அருமடல், கவுல் பாளையம், நெடுவாசல், க.எறையூர், கல்பாடி, அ.குடிக்காடு, அயிலூர், சிறுவாச்சூர்,நொச்சியம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாத புரம், தம்பிரான்பட்டி, கீழ்க்கணவாய், வேலூர், சத்திரமனை உள்ளிட்ட கிராமங்களில் பொது மக்களிடம், பெரம்பலூர் ஒன்றியச் செயலாளரும் – மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான எம். ராஜ்குமார் தலைமையில் வாக்குகள் சேகரித்தார்.
எளம்பலூர் கிராமத் தில் திரண்டிருந்த பொது மக்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தர சன் பேசுகையில், நள்ளிர வுக்கூட்டணி, கள்ளக் கூட்டணி ஆகிய இரண் டையும் தமிழகத்தில் தோற்கடிக்க வேண்டும் என் றும், ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல் பட்டு வரும் ஒன்றிய அரசை அகற்ற வேண்டும் என்றும் பேசினார்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப் பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாக ரன், பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன், உள் ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந் திரளாக கலந்து கொண் டனர்.