திருச்சி, மார்ச் 30- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்புமுகாம் “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 27.02.2024 முதல் 04.03.2024 வரை தத்த னூர் – செம்பழனி கிராமத்தில் நடைபெற்றது.
இச்சிறப்புமுகாமின் துவக்கவிழா தத்தனூர் – செம்பழனி அங்கன்வாடி மய்யத்தில் மாலை 6 மணியளவில் நடை பெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா. செந்தாமரை தலைமையில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமாபேகம் வரவேற்புரையாற்றினார். சிறுமருதூர் ஊராட்சிமன்றத் தலைவர் ஆர். கடல்மணி என் கின்ற கதிரவன் முகாமினை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல் வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, எம் பிரித்திவிராஜ், அப்துல்காதர் மற்றும் வழக்குரைஞர் மன்னர் மன்னர் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் ப. ஆல்பர்ட், கிராமத் தலைவர் டி. பாலு, எம். பாலக்குமார், எம். இரவிக்குமார், எம். சிவக்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். துவக்கவிழா நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா.
அ. ஜெசிமாபேகம் நன்றியுரையாற்றினார்.
ஊட்டச்சத்துக்கான திட்டங்கள்
இரண்டாம் நாளான 28.02.2024 அன்று காலை 9 மணி யளவில் தத்தனூர் – செம்பழனி அங்கன்வாடி வளாகம், சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு களப்பணிகள் மேற் கொள் ளப்பட்டன. மாலை 6 மணியளவில் “மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய்” மற்றும் “சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்கு” ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மூன்றாம் நாளான 29.02.2024 அன்று காலை 9 மணியளவில் களப்பணிகளை தொடர்ந்து கிராம மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் “சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்” மற்றும் “தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துக்கான திட்டங்கள்” ஆகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது.
ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்
நான்காம் நாளான 01.03.2024 அன்று காலை 8 மணியள வில் தத்தனூர் கிராம பொது இடங்கள், சாலைகள் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் தூய்மை செய்யப்பட்டது. மாலை 6 மணியளவில் சிறு, குறு தொழில்முனைவோர் சங்கத் துணைத் தலைவர் கனக சபாபதி தலைமையில் “பொருளா தாரத்தை மேம்படுத்தும் தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி” நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து “ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகள்” என்ற தலைப் பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. அய்ந்தாம் நாளான 02.03.2024 அன்று நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் களால் காலை மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப் பட்டதுடன், வாக்குரிமையின் அவசியத்தை மாணவர்கள் பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். மாலை 6 மணியள வில் “யோகா குறித்த செயல்முறை விளக்கத்தை” யோககுரு கவிஞர் சின்னையன் அளித்தார்.
கருப்பை வாய்ப்புற்றுநோய்
கண்டறியும் பரிசோதனை
நாட்டு நலப்பணித்திட்டத்தின் ஆறாம் நாளான 03.03.2024 அன்று பெரியார் மருந்தியல் கல்லூரி மற்றும் ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை இணைந்து நடத்திய மார்பகம் மற்றும் கருப்பைவாய்புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவமுகாம் மற்றும் பொது மருத்துவமுகாம் நடைபெற்றது. ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்து வமனையின் பெண்கள் பரிசோதனை மய்ய மருத்துவர் சுகிர்தா, மரு. ராஜாத்தி, ஆகியோர் தலைமையில், மருத்துவக் குழுவினர் பெண்களுக்கான மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனையையும், திருச்சி காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் ஆ. கனகராஜ் மற்றும் மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பொது மருத் துவமுகாமும் நடைபெற்றது. இப்பொது மருத்துவமுகாமில் கிராமமக்களுக்கு மருந்து மாத்திரைகளை பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இலவசமாக வழங்கினர். இம்மருத்துவமுகாமில் 105 பேர் பொது மருத்துவமுகாமிலும் மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனையில் 42 பெண்களும் கலந்துகொண்டு பயனடைந்தனர். ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை யின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவஅருணாச்சலம்மற்றும் பெரியார் மருந்தியல்கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்டம் இம்மருத்துவ முகாமினை சிறப்பாக ஒருங்கிணைத்தது.
ஊட்டச்சத்துக்கான திட்டங்கள்
அன்றுமாலை 6 மணியளவில் “ஒன்றிணைவோம் நெகிழி பயன்பாட்டை ஒழிப்போம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிறைவு நாளான 4.3.2024 அன்று காலை 8 மணியளவில் மரம் நடும் விழா நடைபெற்றது. அங் கன்வாடி மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட் டன. அதனைத்தொடர்ந்து மாலை 6 மணியளவில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் நிறைவுவிழா நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையேற்று உரையாற்றினார். அவர் தமது உரையில் நிறைவு, முடிவு என்பது நிகழ்ச்சிக்கு மட்டுமே தவிர சமுதாயப்பணிகளுக்கு எப்போதுமே கிடையாது. சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட,, ஒதுக்கப்பட்ட மக்களுக்காக தமது இறுதி மூச்சுவரை பாடு பட்ட அறிவு ஆசான் தந்தைபெரியார் அவர்களின் பெயரால் இயங்கும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் மக்கள் நலப் பணிகளுக்கு நிறைவு என்பது கிடையாது. மாறாக மனநிறைவு மட்டும்தான் இருக்கும். அந்தவகையில் தத்தனூர்- செம்பழனி கிராமமக்களுக்கு தேவையான மருத்துவ முகாம்கள், கருத் தரங்குகள் மற்றும் களப்பணிகள் மேற்கொண்டதில் பெரியார் மருந்தியல் கல்லூரி மிகுந்த மகிழ்வை அடைகின்றது.
நாட்டின் முதுகெலும்பாக திகழக்கூடிய இளையசமுதாயம் அலைபேசி பயன்பாடுகளை முறைப்படுத்திக் கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அறிவியல் கண்டு பிடிப்புகளை ஆக்கப்பூர்வத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக அதற்கு மாணவர்கள் அடிமையாவதினால் அவர்களின் கற்றல்திறன் குறைவதுடன் நாட்டில் பல்வேறு குற்றங்கள் நடைபெறுவதற்கு காரணமாகின்றது. மாணவர் களை நல்லொழுக்கத்துடன் வெற்றியாளராக உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உண்டு என்று கேட்டுக்கொண்டு, முகாம் இனிதே நிறைவு பெற்ற மைக்கு ஊர்ப்பொதுமக்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.
சிறுமருதூர் ஊராட்சிமன்றத் தலைவர் ஆர். கடல்மணி என்கின்ற கதிரவன், புதுக்குடி ஊராட்சிமன்றத் தலைவர் பவானி இராஜதுரை, பிரித்திவிராஜ் மற்றும் வழக்குரைஞர் மன்னர் மன்னர் ஆகியோர் தமது வாழ்த்துரையில் சிறப்பான சமுதாய சேவையை தத்தனூர் கிராமத்தில் செய்த பெரியார் மருந்தியல் கல்லூரிக்கும் அதன் நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். இந்நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, தலைமைக்கழக அமைப்பாளர் ப. ஆல்பர்ட், இலால்குடி ஒன்றியத் தலைவர் பிச்சைமணி, ஒன்றிய செயலாளர் அங்கமுத்து, கிராமத் தலைவர் டி. பாலு, எம். பாலக்குமார், எம். இரவிக்குமார், எம். சிவக்குமார், வார்டுஉறுப்பினர் செல்வி, அருண் மற்றும் அங்கன்வாடி ஆசிரியர் மாலதிஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிருக்கான நலத்திட்டங்களை…
நிறைவுநாள் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தஞ்சை, வல்லம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தின் மருத்துவ அலுவலர் மரு. இரா. கவுரிபிரியா நிறைவு விழா உரையாற்றினார். அவர் தமது உரையில் தமிழ்நாடு அரசு வளர் இளம் பருவக்குழந்தைகளுக்கு அங்கன்வாடி மய்யங்களிலேயே தடுப்பூசிகளை செலுத்திவருவதாகவும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவுப் பெட்டகம், டாக்டர் முத்துலெட்சுமி அவர்களின் பெயரில் உதவித்தொகை போன்ற அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருவதை பொதுமக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். சத்துணவு மய்யங்களில் கொடுக்கப்படும் முட்டை, கீரை உணவுகளை பள்ளி மாணவர்கள் தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும். துரித உணவுகளை கண்டிப்பாக பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
போதை பழக்கங்களிலிருந்து மீள்வதற்கு மறுவாழ்வு மய்யங்கள் ஏற்படுத்திய காலம் கடந்து தற்போது இணையம் மற்றும் அலைபேசி அடிமைகள் மறுவாழ்வு மய்யம் துவங்கியிருக்கக்கூடிய அவலநிலைக்கு நாடு தள்ளப் பட்டுள்ளது. தற்போது 25, 30 வயதிலேயே இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதன் காரணம் துரித உணவுகளும் தேவையற்ற பழக்கவழக்கங்கள்தான். இதிலிருந்து மாணவ சமுதாயத்தை மீட்க நலவாழ்வுத்துறையுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் பொதுமக்களுக்கு மரக் கன்றுகளையும் வழங்கி சிறப்பித்தார். பெரியார் மருந்தியல் கல்லூரியின் சார்பில் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தத்தனூர் – செம்பழனி அங்கன்வாடி மய்யத்திற்கு குழந்தை களுக்கான 10 நாற்காலிகள் மற்றும் கல்விகற்பதற்கான பெட்ட கங்களையும் அங்கன்வாடி ஆசிரியர் மாலதி அவர்களிடம் வழங்கி சிறப்பித்தார்.
நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட மைக்காக ஊர் இளைஞரணி சார்பாக பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் இணைந்த ஒளிப்படம் அன் பளிப்பாக வழங்கப்பட்டது. திராவிடர் கழக இலால்குடி மாவட்டத் தலைவர் தே. வால்டேர் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு வழங்கிய மின்விசிறியை ப. ஆல்பர்ட் முதல மைச்சரிடம் வழங்கி சிறப்பித்தார். திராவிடர் கழகம் மற்றும் ஊராட்சி மன்றங்களின் சார்பாக பேராசிரியர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு சிறப்பு செய்யப் பட்டது.
திராவிடர் கழக பொறுப்பாளர்கள், பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள், பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், அங்கன்வாடி மாண வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமாபேகம் நன்றியுரையாற்ற விழா இனிதே நடந்தேறியது.
முன்னதாக பேராசிரியர் எஸ்.பிரியதர்ஷினி வரவேற்றார். இந்நாட்டு நலப்பணித்திட்டத்தின் அனைத்து ஏற்பாடுகளை யும் திராவிடர் கழக திருச்சி மண் டலத் தலைவர் ப. ஆல்பர்ட் சிறப்பாக செய்ததுடன் முகாம் நடைபெற உறுதுணையாக திகழ்ந்தார். நாட்டு நலப்பணித்திட்ட நிறைவுநாள் அன்று இலால்குடி எம். பாலகுமார் குடும்பத்தினர் அறுசுவை உணவு வழங்கி பேருதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.