கிருட்டினகிரி மார்ச் 30- கிருட் டினகிரியில் நாடாளு மன்ற தொகுதி தி.மு.க. தலைமையிலான இந் தியா கூட்டணி-காங்கி ரஸ் கட்சி வேட்பாளர் கே.கோபிநாத் அறிமுகக் கூட்டத்திற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் தே.மதியழகன் தலைமை வகித்துப் பேசினார். தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங் கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங் கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத் துப் பேசினார்.
22.3.2024 அன்று தஞ்சையில் நடைப்பெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் தமி ழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்ட மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப் போம் என்ற புத்தகத்தை அமைச்சர் அர.சக்கர பாணி உள்ளிட்ட அனைத்து கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கும் தமது சார்பில் வழங்கிய – கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகத் தலை வர் கோ.திராவிடமணி நிகழ்வில் பங்கேற்று பேசி னார். திராவிடர் கழக மாவட் டச் செயலாளர் செ.பொன்முடி, பொதுக் குழு உறுப்பினர் கா.மாணிக் கம், துணைத்தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து இராசேசன், முன்னாள் மாவட்ட இளைஞரணி தலைவர் இல.ஆறுமுகம், காவேரிப்பட்டணம் ஒன் றியத்தலைவர் பெ.செல் வம், மேனாள் தலைவர் சி. சீனிவாசன், முன்னாள் அமைப்பாளர் சி. இராசா, பூ. இராசேந்திரபாபு மற் றும் ஏராளமான பொது மக்கள் வேட்பாளர் அறி முகக் கூட்டத்தில் கலந்து கொண்டு வெகுவாக சிறப்பித்தனர்.