தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை, மார்ச் 30- டி.என். பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள் ளது. அடுத்த மாதம் (ஏப் ரல்) 27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் டி.என். பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
90 காலிப் பணியிடங்கள்
குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள இடங்க ளுக்கு ஒவ்வொரு ஆண் டும் தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவிப்புகளை வெளி யிட்டு, அதன் அடிப்படை யில் விண்ணப்பிக்கும் தேர்வர்களில் தகுதியான வர்களை தேர்வு செய்கி றது. அதன்படி. முதல் நிலை, முதன்மை மற் றும் நேர்முகத் தேர்வு மூலம் சிறந்த மதிப்பெண் பெறும் தேர்வர்கள் குரூப்-1 பத விகளுக்கு தகுதியானவர் களாக கருதப்படுவார்கள்.
அந்தவகையில் 2024ஆம் ஆண்டுக்கான குரூப்-1 பதவிகளில் காலி யாக உள்ள இடங்களுக் கான அறிவிப்புகளை டி.என்.பி.எஸ்.சி. 28.3.2024 அன்று வெளி யிட்டு இருக்கிறது. 16 துணை ஆட்சியர், 23 துணை காவல்துறை கண்காணிப் பாளர்கள், 14 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 21 கூட்டுறவு சங்கங்க ளின் துணை பதிவாளர் கள், 14 ஊரக மேம்பாடு உதவி இயக்குநர்கள். ஒரு மாவட்ட கல்வி அலுவ லர், ஒரு மாவட்ட அலுவ லர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் படை) என மொத்தம் 90 காலிப்பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணியிடங்களுக் கான ஆன்லைன் விண் ணப்பப்பதிவு தொடங்கி விட்டது. இதற்கு விண் ணப்பிப்பதற்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 27ஆம் தேதி கடைசி நாளாக அறி விக்கப்பட்டு இருக்கி றது. விண்ணப்பப் பதி வில் ஏதே னும் திருத்தங் கள் மேற்கொள் வதற்கு மே 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை அவகா சம் வழங்கப்பட உள்ளது.
இந்த 90 பணியிடங்க ளுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களுக்கு முதல் நிலைத் தேர்வு வருகிற ஜூலை மாதம் 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது. அத னைத் தொடர்ந்து முதன் மைத் தேர்வு சென்னையில் மட் டும் நடத்தப்படும். அந்த தேதி பின்னர் தெரிவிக்கப் படும் என டி.என்.பி. எஸ்.சி. அறிவித்துள்ளது.
இந்த பணியிடங்க ளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 34 வயது நிர்ணயிக் கப்பட்டுள் ளது. இதில் இடஒதுக்கீடு அடிப்படையில் 5 ஆண் டுகளுக்கு வயது தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப் பிப்ப தற்கான கல்வி தகுதி என்ன?, என்ன மாதிரி யான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்? உடற்தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பதற் கான நடைமுறைகள் என்ன? தேர்வு கட்டணம் எவ்வ ளவு? என்பது போன்ற விவரங்களுக்கு https://www.tmpsc.gov.in/ Document/english/04-2024- GRPI-ENG-.pdf இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்..