30.3.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து, டில்லியில் மார்ச் 31ஆம் தேதி மாபெரும் பேரணி. ராகுல் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
* சமூக நீதிக்காக பாடுபடும் பா.ம.க. ராம்தாஸ் எப்படி பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பீகாரில் 40 மக்களவை தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஅய்எம்எல் – 3, சிபிஅய் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு.
* இந்திய மக்களிடையே அதிகரித்துவரும் சமத்துவ மின்மை குறித்து ஏன் தேர்தல் களத்தில் அதிகம் பேசவில்லை என்கிறார் கட்டுரையாளர் பட்ரலேகா சட்டர்ஜி.
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், ஜனநாயகத்தை அழித்திடும் செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் எச்சரிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன், 10,000 கோடி ரூபாய் பத்திரங்களை அச்சிடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
*’மோடியின் உத்தரவாதத்திற்கு’ உத்தரவாதம் இல்லை. வேலைவாய்ப்பு முதல் டிஜிட்டல் இந்தியா, நாரி சக்தி மற்றும் பிற, பாஜக அரசு அதன் பல வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என திர்னாமுல் காங்கிரஸ் எம்.பி. டிரக் ஓ பிரைய்ன் கிண்டல்.
* டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது குறித்து, அமெரிக்கா, ஜெர்மனி நாடுகளை தொடர்ந்து அய்.நா.வும் விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவில் மக்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம் என அய்நா பொது செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபானே துஜாரிக் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2024 பொதுத் தேர்தல் இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என திருமாவளவன் பேச்சு.
தி இந்து:
* இந்திய அரசை விமர்சித்ததற்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவின் ஜனநாயகப் பாரம்பரியம் அடிப்படையிலேயே கீழறுக்கப்படுகிறது என்று நாவலாசிரியர் அமிதவ் கோஷ், இலக்கியக் கோட்பாட்டாளர் காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக், பேராசிரியர் அகில் பில்கிராமி மற்றும் பேராசிரியர் ஷெல்டன் பொல்லாக் உள்ளிட்ட பிரபலங்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்
*”எனது சொந்த நாட்டில் மனித சுதந்திரத்தின் இந்த அடிப்படை மீறல் குறித்து தனது கோப உணர்வை” வெளிப் படுத்தினார். “விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படு வதும், மனிதர்களை நடத்துவதில் நியாயம் இல்லாமல் இருப்பதும் நிச்சயமாக நாடு ஒரு தொடர்ச்சியான ஏற்பாட்டில் செய்துள்ள மிக மோசமான அநீதிகளில் ஒன்றாகும்” என்று பேராசிரியர் அமர்த்தியா சென் அறிக்கை.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment