நல்ல வீடு, வாசல், வசதி இல்லாதவர்கள், படிப்பு, வைத்திய வசதி இல்லாதவர்கள், சோற்றுக்குத் துணிமணிக்கு வசதி இல்லாதவர்கள் எல்லாம் யார்? நம்மவர்கள்தானே! போலீசுகாரர்களை வரிசையாகக் கொண்டு வந்து நிறுத்துங் கள். அவன் சட்டையெல்லாம் கழற்றிப் பாருங்கள். அதில் எவனாவது பூணூல் போட்டுக் கொண்டு இருப்பானோ? அதில் எவனாவது பார்ப்பான் இருப்பானோ? கக்கூசு எடுப்பவனில் எவனாவது பார்ப்பான் இருப்பானா? விவசாயம் செய்பவனில் எவனாவது பார்ப்பான் என்று இருப்பானா? நெசவு வேலை செய்பவனில் லட்சம் பேர்களைப் பார்த்தாலும் இதேதானே நிலை? இதற்கெல்லாம் நாம் கீழ் ஜாதி என்பதன்றி வேறொரு காரணம் உண்டா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1282)
Leave a Comment