அரசுப் பதவிகளில் அவாள்களின் ஆதிக்கத்தை உடைத்த கலைஞர் என்னும் போராளி!

2 Min Read

குப்பனும், சுப்பனும், கோவிந்தனும் அரசு அதிகாரியானது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள் இன்றைய இளைஞர்களே….!!
அது 1972ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் இரண்டாம் முறையாக முதலமைச்சரான காலம்..!
அரசு அலுவலகங்கள் முழுவதும் அவாள்களால் நிரம்பி வழிந்த நேரம்..!

ஞாயிறு மலர்

அரசு வேலைக்கு,

TNPSC ரெக்ரூட்மன்ட் என ஒன்றிருப்பது கூட OBC, BC, SC மாணவர்கள் அறியாத காலமது…!!
ஒரு பொதுப்பணித்துறை டிவிஷனல் அலுவலகத்தை மாதிரிக்கு எடுத்துக் கொள்வோமானால்..,
அதன் செயற்பொறியாளர் வெங்கட்ராமன்..
டிவிஷனல் அக்கவுன்ட்டன்ட் சேஷாத்திரி,
சூப்பிரண்டண்ட் சிறீனிவாசன், ஹெட்கிளார்க் ராமானுஜன்,
கிளார்க் பரந்தாமன்.. என இப்படிப் போகும் லிஸ்ட்..!
கடை நிலை ஊழியர் என்னும் பியூன் ஒரு தங்கராசாகவோ.. செல்வராசாகவோ.. இருப்பதுவே பெரிய விடயம்..!
பொ.ப.துறையிலேயே இந்த நிலை என்றால், மாவட்ட ஆட்சியரின் கட்டுப் பாட்டுக்குள் வரும் வருவாய்த்துறை ஏனைய பத்திரப்பதிவு, கல்வித்துறை, வாகனப் போக்குவரத்து (RTO), வணிக வரித்துறை.. இவைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.!
கல்விப் பின்புலமில்லாத குடும்பங் களிலிருந்து புதிதாக பட்டப் படிப்பு முடித்து வரும் OBC, BC, SC  கிராமப்புற மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதலோ.., பயிற்சியோ.. இல்லாத காரணத்தால்..
இந்த அரசு பணிகளுக்கான TNPSC  நடத்தும் போட்டித் தேர்வில் வென்று உத்தியோகத்தை பிடிப்பது குதிரைக் கொம்பான விடயம்..!
இதனை மனதில் கொண்டு…
1972ஆம் ஆண்டு, படித்து முடித்து வேலையில்லா பட்டதாரிகளுக்கு இளைஞரணி (Youth corps) என்னும் ஒரு திட்டத்தை முத்தமிழறிஞர் கலைஞர் அறிவிக்கிறார்…!!
அதன் வழி மாதம் 175 ரூபாய் உதவித் தொகை நிர்ணயிக்கப்பட்டு,
மாவட்ட ஆட்சியரால் OBC, BC, SC  பட்டதாரிகளிடம் விண்ணப்பம் கோரப்பட்டு, மெரிட் மற்றும் சமூக நீதி அடிப்படையில் பட்டதாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு.., அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் கவுரவ உதவியாளர் களாக நியமிக்கப்பட்டனர்.

அதோடு நின்றிருந்தால் முத்தமிழறிஞர் கலைஞர் மற்ற தலைவர்களிலிருந்து வேறுபட்டு சரித்திரம் போற்றும் தலைவராகி இருக்க மாட்டார்…!!

இந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பட்டதாரி இளைஞரணியினர் அந்தந்த ஆண்டு TNPSC  போட்டித் தேர்வில் கலந்து கொள்ள, அவர்களுக்கு முன்கூட்டிய அனுபவம் மற்றும் உத்தியோகத்திற்கென தனி மதிப்பெண்கள் வழங்கி அவர்கள் அனைவரும் TNPSC -யால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் Group iv, Group ii, Group i  என அனைத்துப் பதவிகளிலும் அமர வைக்கப்பட்டனர்..
அதிலிருந்து உடைந்ததுதான் அவாள்களின் அரசு அலுவலக டாமினேஷனும் மேதாவித்தனமும்…
அதன் பின்னரே குப்பனும் சுப்பனும் கோவிந்தனும் அரசு அதிகாரியானது…
முத்தமிழறிஞர் கலைஞரை விமர்சிக்கும் இக்கால அரைவேக்காடுகளுக்கு,
நலிந்த சமூகத்தினரின் முன்னேற்றத் திற்கான அவரின் தொலைநோக்குப் பார்வையும், சமூக நீதி அக்கறையும் புரிய வாய்ப்பில்லை…
கலைஞர் என்னும் போராளி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *